புதிய நாளுக்குள்..

தியானம் (தை 26, 2022)

வாழ்விலே திறந்து வைத்திருக்கும் வாசல்கள்

யாக்கோபு 4:7

தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்


ஒரு மனிதனானவன் வியாதிப்பட்டிருந்ததால் அவனை மருத்துவமனை யொன்றிலே அனுமதித்தார்கள். அந்த மனிதனாவனை பார்க்கும்படிக்கு சென்றிருந்த நண்பனொருவன், தனக்கு தொற்றும் காய்ச்சல் கிருமி இருப்பதை அறியாதிருந்தான். அந்த நண்பன் ஊடாக, மருத்தவமனை யிருந்து மனிதனானவுனுக்கும் அந்த காய்ச்சல் தொற்றியதால், அன்று இராத்திரி அவனுடைய ஆரோக்கியம் மேலும் குன்றிப் போயிற்று. அந்த நண்பன் திட்டமிட்டு அதை செய்ய வில்லை ஆனால் அவனை அறியா மலே அவன் அந்த கிருமியை பரப்பும் ஊடகமாகயிருந்தான். இவ்வண்ணமா கவே, சில வேளைகளிலே ஆண்டவர் இயேசுவின் இரட்சிப்பை பெற்றுக் கொள்ளதவர்களுடனான உறவும் இருக்கும். நம்முடைய வாழ்க்கையிலே நாம் திறந்து வைத்திருக்கும் கதவுகள் வழியாகவே நண்பர்களோ எதிரிகளோ நம்முடைய வாழ்க்கை யில் உட்புக முடியும். நம்முடைய நண்பர்கள் உறவினர்கள் என்று நம் முடைய வாழ்க்கையிலே உட்புகும் மனிதர்கள்; எந்த ஆளுகைக்கு உட்பட்டிருக்கின்றார்களோ, அந்த ஆளுகையின்படியே அவர்கள் வாழ்க்கை யிருக்கும். இதனால் நாம் இந்த உலகத்தைவிட்டு முற்றிலும் பிரிந்து இருக்க வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் கூறவில்லை (1 கொரி 5:10). ஆனால் எந்த உறவுகளோ, நண்பர்களோ, நாம் தேவனுக்கென்று செய்து வரும் காரியங்களை குறித்து சமரசம் செய்யாதபடிக்கு நாம் எப்போதும் தேவனுக்கு கீழ்படிந்திருக்க வேண்டும். இரண்டு மனிதர்கள் நண்பர்களாவதற்கு அவர்கள் இருவரும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் ஒரு பொதுவான காரியம் அவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும். அப்படியில்லாத இடத்தில் அவர்கள் நண்பர்களாக இருக்க மாட்டார்கள். அந்த பொதுவான பிணைப்பு, இந்த உலக போக் கிற்கு நம்மை நடத்துவதாக இருந்தால், அந்த இடத்திலே நாம் வழுவிப் போதற்குரிய சாத்தியங்கள் அதிகமாக இருக்கும். எதிராளியாகிய பிசா சானவன், வஞ்சிக்கின்றவனாக இருப்பதால், நியாயமுள்ளவனாகவும், யதார்த்தமான பேச்சுள்ளவனாகவும், நம்மை குறித்து கரிசணையுள்ள வன்போலவும், நாம் செல்லும் வழியை ஆதரிக்கின்றவனுமாகவே தன்னை காண்பித்துக் கொள்வான். அதாவது, நம்முடைய இலக்கை அடைந்து கொள்வதற்கு ஆதரவு அளிப்பவனைப் போலவே வார்த்தைகளை பேசு வான். பிரியமானவர்களே, எந்த ஒரு காரியமும் நீங்கள் தேவனுக்கெ ன்று செய்யும் வேலையை தடைசெய்யாதபடிக்கு காத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

மனிதர்ளுடைய எண்ணங்களை அறிந்த தேவனே, நான் உம்முடைய வார்த்தைக்கு கீழ்படிந்திருக்கவும், பிசாசானவனுடைய தந்திரங்களுக்கு எதிர்த்து நிற்கவும் பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கொரி 11:3