புதிய நாளுக்குள்..

தியானம் (தை 25, 2022)

வசீகரமான அழைப்புக்கள்

நெகேமியா 6:3

நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூ டாது; நான் அந்த வேலை யைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன்


பல எதிரப்புக்கள், சவால்கள், சோர்வுகள், பெலவீனங்கள் மத்தியிலும், சலித்துப் போகாமல், எருசலேமின் மதில்களானது கட்டிமுடிகிறதையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், எதிரிகளான சன்பல் லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயி ருந்த மற்றப் பகைஞரும் கேள்விப்பட்டபோது, நாம் பேச்சு வார்த்தை செய்வோம் என்று நெகேமியாவுக்கு பொல்லாப்பு செய்யும்படிக்கு வஞ்ச கமாக அழைப்பு விடுத்தார்கள். அத ற்கு நெகேமியா அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது. நான் அந்த வேலையை விட்டு உங்களிடத்திற்கு வருகிறதி னால் அது மினக்கட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன். ஒரு முறையல்ல அவர்கள் இந்தப்பிரகார மாக நாலுதரம் நெகேமியாவிற்கு, கலந்தாலோசிப்போம், பேச்சு வார்த்தைகளை செய்வோம் என்று நன்மை செய்கின்றவர்களைப் போல சொல்லியனுப்பினார்கள்; ஆனால் நெகேமியாவோ முன்பு சொன்னது போலவே நாலுதரமும் அவர்களுக்கு மறுமொழி அனுப்பினார். பிரியமானவர்களே, ஒரு வேளை நீங்கள் குறிப்பிட்ட ஊழியத்திற்காக பிரத்தியேகமாக பிரித்தெடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது பல விதமாக உதவி ஊழியங்களை செய்து வரலாம். உதவி ஊழியங்களை செய் யாதவர்கள் சபையிலே எவருமே இல்லை. உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகள் சிறிதானதாகவே அல்லது பெரிதானதாகவோ இருக்க லாம். நீங்கள் தேவனுடைய ராஜ்யத்திற்கென்று பெரிய வேலையை செய்கின்றீர்கள் என்பதை மறந்து போய்விடாதிருங்கள். பிசாசானவனே நம்முடைய எதிராளியாக இருக்கின்றான். அவன் நம்முடைய வாழ்க் கையில் நுழைவதற்கு, உடைந்த மதில்களும், திறந்த வாசல்களும் நம்மிடத்தில் இருக்க வேண்டும். அவை இல்லாத இடத்திலே, அவன் தன் ஊடகங்கள் வழியாக நம்மை வஞ்சிக்கும்படியாக வருவான். அந்த ஊடகம் நம் கல்வியாகவோ, வேலையோகவோ, உறவாகவோ, நண்ப னாகவோ, பொருளாகவோ இருக்கலாம். நாம் செய்யும் தேவ சேவை யைவிட்டு செல்வதற்கு அந்த அழைப்புக்கள் வசீகரமானதும், நியாய மானதுமாக இருக்கலாம். ஆரம்பத்தில் ஒரு சிறிய காரியமாக இருக் கலாம் ஆனால் அது நாளடைவில், நம்முடைய பரலோக பிரயணாத்தி ற்கு பெரும் பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.

ஜெபம்:

எல்லாவற்றையும் அறிந்தவரே, மேய்பனுடைய சத்தம் எது, மேய்பனைவிட்டு என்னை தூரப்படுத்தும் அந்நியருடைய சத்தம் எது என்பதை நிதானித்தறியும் ஞானமுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 10:1-5