புதிய நாளுக்குள்..

தியானம் (தை 24, 2022)

பூரணமான மனிதன் எங்கே?

1 பேதுரு 2:21

நீங்கள் தம்முடைய அடி ச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.


அம்மா, நானும் என்னுடைய அக்கா, தம்பிமாரும் ஒன்றாய் ஒரு வீட்டிலே இருந்தது போலவே நீங்களும் உங்கள் சதோரங்களோடு இருந்தீர்களா என்று மகனானவன் தன் தாயிடம் கேட்டாள். அதற்று தாயார்: ஆம் மகனே, பல கஷ;டங்கள் இருந்த போதும், உங்களைவிட ஒருமைபாட்டுடன் வளர்ந்து வந்தோம் என்று பதிலளித்தால். மகனா னவன் தாயை நோக்கி: அப்படி வள ர்ந்து வந்த நீங்கள், இன்று தனிக் குடும்பங்களாக பிரிந்து, சில கருத்து வேறுபாடுகளுடன் வாழ்கின்றீர்கள். சில இடங்களிலே ஒருவருக்கொருவர் ஏட்டிக்கு போட்டியாக இருக்கின்றீர் கள். ஒரு சிலருடன் கதைகளை குறை த்திருக்கின்றீர்கள். அதெப்படி என்று கேட்டான். மகனே: கடல் யாத்திரை யிலே அலைகள் ஒன்றின்பின் ஒன்றாக வருவதுபோல வாழ்க்கையும் சவால் நிறைத பிரயாணம். தற்போது, உனக்கும் உன் சகோதரர் களுக்கும் வேறு தெரிவுகள் இல்லாதிருப்பதாலும், உங்கள் பாட்டிற்கு போய் வாழ்வதற்கு வசதியில்லாதிருப்பதாலும் நீங்கள் ஒன்றுபட்ட வ ர்கள் போல இருக்கின்றீர்கள். பெற்றோரின் சொல்லை ஒரளவிற்கு கேட் கின்றீர்கள் ஆனால் ஆண்டுகள் கடந்து நீங்கள் வயதிற்கு வந்து, உழை க்கும் நாட்கள் வரும்போது உங்களுக்கு இந்த உலகிலே பல தெரி வுகள் உண்டாகும். அப்போது உன் உள்ளத்திலிருப்பது வெளியே வர ஆரம்பிக்கும் என்று தாயாளவள் பதிலளித்தாள். ஆம் பிரியமானவர் களே, தனி மனிதனாக வாழ்பவன்கூட, இரண்டுபட்ட யோசனைகளுடன் வாழ்கின்றான் (யாக் 1:8). இரண்டு பேராக வாழும் போது அங்கே கரு த்து வேறுபாடுகள் நிச்சம் உண்டாகும். ஒருவேளை அடக்கு முறையி னாலும் பயத்தினாலும் ஒருவன் அடங்கியிருந்தாலும், காலங்கள் மாறும் போது வேஷங்கள் களைந்து போகும். இந்த உலகிலே பலர் கூடி வரும் இடத்திலே கருத்து முரண்பாடுகள் தவிர்த்துக் கொள்ள முடியாது. அது போலவே, நாம் சபை ஐக்கியத்திற்கு செல்லும் போது, அங்கே பலதர ப்பட்ட மனிதர்கள் வருவார்கள். அவர்கள் மத்தியிலே உண்டாகும் கரு த்து முரண்பாடுகள் சில வேளைகளிலே கலகங்ளாக மாறிவிடுகின்றது. கருப்பொருளாவது, உள்வீட்டு பிரச்சனைகள் இல்லாத பூரணமான மனி தனையும், குடும்பத்தையும், சபையையும் நீங்கள் கண்டுபிடிக்கும்படி தேடுவீர்களானால், நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் தேடிக்கொண்டே இருப்பீர்கள். தேடுதலை விட்டுவிட்டு, நீங்கள் கிறிஸ்துவைப் போல பூரணராகும்படிக்கு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றுங்கள்.

ஜெபம்:

பிதாவாகிய தேவனே, உம்முடைய சித்தத்தை நிறைவேற்றும்படி; நன்மைசெய்து பாடுபடனுபவித்தது, பொறுமையோடே உபத்திரவங்களை சகித்த இயேசுவைப் போல நானும் மாறும்படிக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கொலோ 3:1-6

Category Tags: