புதிய நாளுக்குள்..

தியானம் (தை 23, 2022)

பாரம் சுமப்பவர்களா சுமத்துகின்றவர்களா?

கலாத்தியர் 6:2

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.


யூத ராஜ்யத்தின் ஜனங்கள், பாபிலோனுக்கு சிறைப்பட்டு போய், சுமார் 70 வருடங்கள் பின், கட்டங்கட்டமாக எருசலேமிற்கு திருப்பினார்கள். பல ஆண்டுகளுக்கு பின், மூன்றாம் கட்டமாக, நெகேமியா என்னும் தேவ ஊழியர், பாழாய் கிடக்கும் எருசலேமின் மதிலை (அலங்கத்தை) கட்டும்படியாக ராஜா அனுமதியோடு திரும்பினார். சிறையிருப்பிலிருந்து திரும்பிய சந்ததியினர் யாவரும், சிறையிருப்பின் வாழ்வின் ஒடுக்கு முறைகளையும், அடிமைத்தன வாழ்வின் துன்பங்களையும் நன் றாக அறிந்திருந்தார்கள். எருச லேமின் அலங்கத்தின் வேலைகள் முடிவு பெறுகின்ற நாட்களிலே, ஜனங்களுக்குள் அநேகரும் அவர் களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று. அதாவது, சிறையிருப்பிலிருந்து வந்த வர்களில் பிரபுக்களும், ஐசுவரியமுள்ளவர்களுமாக இருந்த சிலர், வறு மையிலே வாழும் தங்கள் சொந்த ஜனங்களுக்கு உதவி செய்வதற்கு பதிலாக, அவர்களுக்கு கடன் கொடுத்து, வட்டி வாங்கி, கடனை கொடு க்க முடியாதவர்களுடைய நிலங்களையும், திராட்சை தோட்டங்களை யும்;, சொத்துக்களையும் அபகரித்து, அவர்களின் பிள்ளைகளையும் அடிமையளாகிக் கொண்டார்கள். இதை கேள்விப்பட்ட நெகேமியா மிகவும் கோபங்கொண்டு, தன் மனதிலே ஆலோசனைபண்ணி, பிற் பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்து கொண்டு, புறஜாதி யாருக்கு விற்கப்பட்ட யூதராகிய எங்கள் சகோதரரை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டிருக்கையில், நீங்கள் திரும்ப உங்கள் சகோ தரரை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப் போகலாமா என்று பிரபுக்களும் ஐசுவரியவான்களும் தங்கள் சொந்த சகோதரருக்கு செய் யும் அநியாயத்தையும் பொல்லாப்பையும் அவர்க ளுக்கு உணர்;த்தினர். பிரியமானவர்களே, இந்த உலகிலே நம்மை எதிர்க்கும் சக்திகள் பல உண்டு. வெளிலே இருந்து வரும் பல சவால்கள் மத்தியிலே நாம் தாப ரிக்கும் ஊராகிய பரலோகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற வேளையிலே, நாம் நம் நடுவே கலகங்களையும், பிரிவினைகளையும், உபத்திரவங்களையும், சுமைகளையும் ஏற்படுத்திவிடக் கூடாது. கூடுமா னவரை பொருள் உதவியும், சரீர உதவியும் செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல், நம்முடைய சுய நீதி, சுய விருப்பம், சுய இலக்குகள், சுய இச்சசைகளை நிறைவேற்றுவதற்காக நம் உடன் சகோதரர்களை துன்பத்திற்குள்ளாகின்றவர்களாக இருக்கக் கூடாது.

ஜெபம்:

உபத்திரவங்களிலும் கட்டுகளிலுமிருந்து என்னை மீட்ட தேவனே, நான் எந்த காரணத்திற்காகவும் மற்றவர்களை துன்ப படுத்து கின்றவனா(ளா)க மாறிவிடாதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 தெச 5:14-15