புதிய நாளுக்குள்..

தியானம் (தை 22, 2022)

நிலையானவைகளை அறிந்த நீங்கள்...

லூக்கா 21:27

அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமை யோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.


வரும் ஆண்டுகளிலே, நாட்டின் பொருளாதார நிலைமை எப்படியாக போகின்றது? எந்த உற்பத்தியிலே நான் முதலீடு செய்ய வேண்டும்? பங்குச் சந்ததையிலே (Stock market) எந்த பங்குகள் விலைறேப் போகி ன்றது? எவை குறைந்து போகப் போகின்றது? என்று தரவுகளையும் ஆய்வுகளையும் நான் முன்கூட்டியே அறிந்து கொண்டால்;, நான் மிக ஞானமாக என் முதலீடுகளை செய்து கொள்ளலாம். அது எத்தனை நன்மை யாக இருக்கும என்று இனி நடக்கவி ருக்கும் காரியங்ளைக் குறித்து மனித ர்கள் முன்கூட்டியே அறிய விரும்பு கின்றார்கள். வேறு சிலரோ, என்னு டைய எதிர்காலம் எப்படியாக இருக் கப் போகின்றது? என்னுடைய பிள் ளைகளுடைய நிலைமைகள் எப்படி யாக இருக்கும்? என்று தங்கள் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு முன்ஏற்பாடுகளை செய்யும்படிக்கு அலைந்து திரிகின்றார்கள். இவ்வண்ணமாக இந்த உலகத்தையும் அதன் போக்குகளையும் ஆராய்நது அறிந்து, இந்த பூமியிலே சுகபோகமாக வாழ்க்கிறவர்களை பெரியவர்களும், பிரபுக்களும், ஞானவான்களும் என்று கருதப்படுகின்றார்கள். நம்முடைய தேவனாகிய கர்த்தர் தாமே, உலகத்தின் போக்கையும், இனிமேல் சம்பவக்கப் போவததையும், அதன் முடிவையும், எது நிலையானது என்பதையும், நாம் எதைப் பற் றிக் கொள்ள வேண்டும் என்பதையும் நமக்கு முன்கூட்டியே எழுதிக் கொடுத்திக்கின்றார். சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடை யாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இரு தயம் சோர்ந்துபோம். அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமை யோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள். இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிரு ப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த் து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார். வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை என்று ஆண்டவர் இயேசு முன்கூட்டியே நமக்கு கூறியிருக்கின்றார். நிலையான நகரம் நமக்கு இங்கில்லை என்பதை அறிந்த நீங்கள் நிலையான பரலோகத்திற்குரியவைகளை நாடுங்கள்.

ஜெபம்:

நம்முடைய குடியிருப்பு இங்கில்லை என்று கூறிய தேவனே, அதை நான் அறிந்திருந்தும், உணராதவனைப் போல வாழாமல், பரலோ கத்திற்குரியவைகளை தேடும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 13:14