புதிய நாளுக்குள்..

தியானம் (தை 21, 2022)

தேவ செய்தியை மேன்மைப் படுத்துங்கள்

யோனா 3:5

அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்;


முற்காலத்திலே இருந்த மகா நகரமாகிய நினிவேயின் அக்கிரமங்கள் பெருகி அவைகள் தேவனுடைய சமுத்தில் வந்து எட்டினது. அந்த மகா நகரத்திற்கு வரவிருக்கும் பயங்கரத்தை குறித்து எச்சரிப்பின் சத்தத்தை கொடுக்கும்படிக்கு, தேவனாகிய கர்த்தர் யோனாவை அங்கே அனுப்பினார். இந்த சந்தர்ப்பத்திலே எச்சரிப்பின் எக்காளத் தொனி யோவாவின் வாயிலிருந்து பிறந் தது. நினிவேயின் ராஜாவும், சகல ஜனங்களும், அது தேவனுடைய எச் சரிப்பின் சத்தத்தை கேட்டு, தேவ னுடைய சமுகத்திலே தங்களை தாழ்த்தினார்கள். அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி னார்களென்று தேவன் அவர்களு டைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார். யோனாவுக்கு இது மிக வும் விசனமாயிருந்தது. தான் கூறியது நடக்கவில்லை என்று அவன் கடுங்கோபங்கொண்டான். இதனால் யோனாவிற்கு நினிவே பட்டணத் திலிருந்து ஜனங்கள்மேல் அன்பு இருக்கவில்லை, யோனா அன்புடன் அந்த எச்சரிப்பின் சத்தத்தை கூறவில்லை என்று கூறிக் கொள்கின் றோம். இந்த சம்பவத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். 1. யோனாவை தேவனாகிய கர்த்தர் அனுப்பினார். 2. அவனுடைய வாயிலே தேவனு டைய எச்சரிப்பின் செய்தி இருந்தது. 3. அதை அவன் நினிவேயின் ஜனங்களுக்கு உரைத்தான் ஆனால் அன்புடன் உரைக்கவில்லை. எனவே, நினிவேயின் ஜனங்கள், யோனாவைப் பார்த்து, நீர் இதை அன்புடன் உரைக்கவில்லை ஆதலால் நாம் உம்மை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று கூறி, அந்த எச்சரிப்பின் சத்தத்தை அசட்டை செய் திருந்தால் அவர்களுடைய நிலை என்னவாக முடிந்திருக்கும்? யோனா வின் மனதிலுள்ள எரிச்சலை கர்த்தர் கண்டார். அதைக் குறித்து கர்த்தர் தன்னுடைய தீர்க்கதரிசியாகிய யோனாவை விசாரித்தார். பிரியமானவ ர்களே, இன்றைய உலகிலே, சில ஜனங்கள் போதக சமர்த்தகளாகியி ருப்பதால், இந்த ஊழியர் அன்போடு இதைக் கூறவில்லை, அந்த ஊழி யருக்கு கடுமையாக இதைக் கூறிவிட்டார் என்று தேவனுடைய எச்சரி ப்பின் வார்த்தைகளை அசட்டை செய்து, போதகர்களுக்கு போதகராகி விடுகின்றார்கள். அந்த நிலைமை நமக்கு ஆகாதது. நாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிவோம், இருதயங்களை ஆராய்தறிகின்ற தேவன் தாமே மிகுதியானவற்றை பார்த்துக் கொள்வார்.

ஜெபம்:

என் வழிகளை அறிந்த தேவனே, உம்முடைய வார்த்தை பேசப்ப டும் போது, அந்த வார்த்தையின்படி நான் என் வாழ்வில் செய்ய வேண்டியதை செய்து முடிக்க எனக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எரேமியா 6:10