புதிய நாளுக்குள்..

தியானம் (தை 20, 2022)

எச்சரிப்பின் எக்காள சத்தம்

நெகேமியா 4:20

நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார்


பட்டணத்தை நோக்கி ஒரு பயங்கரமான சூறாவளி சுழல்காற்று வருகி ன்றது என்று செய்தி ஊடகங்கள் வாயிலாக காலநிலை அறிக்கைவிடு ப்படுகின்ற போது, அந்த எச்சரிப்பை கேட்டு அதற்கு தப்பித்துக் கொள் ளும்படிக்கு முன்னேற்பாடுகளை பலர் மனிதர்கள் செய்து கொள் வார்கள். சிலரோ, இவர்கள் இப்ப டித்தான் சொல்வார்கள் ஆனால் பின்பு பெரிதாக ஒன்றும் இருக் காது என்று அந்த செய்திளை அச ட்டை செய்துவிடுவதுண்டு. நெகே மியா என்றும் தேவ ஊழியர், எருசலேமின் அலங்கத்தை கட்டிக் கொண்டிருக்கும் போது, எதிரிகளின் அச்சுத்தல் இருந்ததால், அவர் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: வேலை பெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது. நாம் அலங்கத்தின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாயிருக்கி றோம். நீங்கள் எவ்விடத்திலே எக்காளச் சத்தத்தைக் கேட்கிறீர்களோ அவ்விடத்திலே வந்து, எங்களோடே கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார் என்றார். எக்காளம் ஊதுகிறவன் நெகேமி யாவின் அருகிலே நின்றான். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலே, நாம் எப்போதும் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ப தைக் குறித்து தியானித்தோம். இனி வரவிருக்கும் ஆபத்துக்களைக் குறித்து முன்கூட்டியே, சொற்பனங்கள், தீர்கதரிசனங்கள், தரிசனங்கள், தேவ செய்திகள் வாயிலாக நமக்கு அறியத் தருவது தேவனுடைய பிள்ளைகளுக்குரிய அனுக்கிரகமாக இருக்கின்றது. அப்படிப்பட்ட எச்ச ரிப்பின் செய்தியை நாம் நினைத்த பிரகாரமாக தேவன், நமக்கு தெரிய படுத்தப் போவதில்லை. அவர் ஏற்படுத்திய தம்முடைய ஊழியர்கள் வழியாகவும், அவர் தெரிந்தெடுக்கும் பாத்திரங்கள் வழியாகவும் நமக்கு தெரிவிக்கின்றார். இந்த உலகம் துரிதமாக ஒடிக் கொண்டிருக்கின்றது. மனிதர்களும், எப்போதும் எங்களுக்கு நேரமில்லை என்று ஏதோ ஒரு அலுவலாக இருக்கின்றார்கள். அதனால், தேவனுடைய எச்சரிப்பின் எக் காள சத்தத்தை கேட்பதற்கு தவறிவிடுகின்றார்கள். சிலரோ, இவர்கள் இப்படி சொல்வார்கள் ஆனால் அங்கே ஏதும் நடக்கப் போவதில்லை என்று அசட்டை செய்து விடுகின்றார்கள். நாமோ அப்படியிருக்காமல், பாவத்தைக் குறித்தும், ஆபத்தைக் குறித்தும் தேவ செய்திகளை நாம் கேட்கும் போது, நாம் ஒருமனப்பட்டு ஒன்று கூடும் போது, நாம் தேவனுடைய சத்ததிற்கு செவி கொடுப்பதால் தேவன் நமக்காக யுத்தம் செய்வார்.

ஜெபம்:

தேவனாகிய கர்த்தாவே, நீர் காவற்காரராக வைக்கும் மனிதர்கள் எச்சரிப்பின் சத்தத்தை நாம் கேட்டு, உம்முடைய வார்த்தைக்கு கீழ்படியும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எசேக்கியேல் 33:1-9