புதிய நாளுக்குள்..

தியானம் (தை 19, 2022)

பகைஞர் ஆலோசனை அபத்தமாகிற்று

நெகேமியா 4:15

தேவன் அவர்கள் ஆலோசனையை அபத்தமாக்கினாரென்றும், எங்கள் பகைஞர் கேட்டபோது


எதிர்பாராத நேரத்திலே எருசலேம் அலங்கத்தை கட்டுகின்றவர்கள் மேல் விழுந்து, அவர்களை கொன்றுபோடும்படிக்கும், அவர்களுடைய தேவ பணியை குலைத்துப் போடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த எதிரிகளின் சதி, நெகேமியாவிற்கு தெரியவந்ததென்றும், நெகேமி யாவும், அவரோடிந்தவர்களும் விழிப்புடன் ஆயத்தமாக இருக்கின்றா ர்கள் என்றும் எதிரிகள் அறிந்த போது, எதிரிகள் போட்டிருந்த சதித் திட்டம் எதிரிகளுக்கு கைகூடி வரா மல் போயிற்று. தேவன் அவர்கள் ஆலோசனையை அபத்தமாக்கினா ரென்று யாவரும் அறிந்து கொண் டார்கள். அன்றுமுதற்கொண்டு என் வேலைக்காரரில் பாதிப்பேர் வேலை செய்தார்கள், பாதிப்பேர் வேலை செய்கின்றவர்களுக்கு பின்னாக நின்று காவலைக் காத்தார்கள். வேலை செய்கின்றவர்களும் யுத்ததிற்கு ஆயத்தமுள்ளவராக அவரவர் ஒரு கையினாலே வேலைசெய்து, மறு கையினாலே ஆயுதம் தரித்திருந் தார்கள். கட்டுகிறவர்கள் அவரவர் தங் கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலை செய்தார்கள்;. அதாவது, விழிப்புடன் தரித்திருந்து, தங்களுக்கு நியமிக்க ப்பட்ட கிரியைகளை செய்து முடியத்தார்கள். பிரியமானவர்களே, மனிதர்களுடைய ஆலோச னைகளும் அவன் யோசனைகளும் அழிந்து போகும். ஆனால் தேவனு டைய ஆலோசனைகளும் யோசனைகளுமே என்றென்றுமாய் நிலை நிற்கும். நம்முடைய பூவுல வாழ்க்கையிலே, நம்மை எதிர்க்கும் சக்திகள் பல உண்டு என்றும், எவரெவர், பிசாசின் சதித்திட்டத்திற்கு தங்களை ஒப்புக் கொடுகின்றார்களோ, அவர்கள் வழியாக எதிராளியாகிய பிசா சானவன் நம்மை தாக்கிக் கொள்ளும்படிக்கு, அவரகள் வழியாக சதி களை உண்டு பண்ணுவான். நாம் தேவனுடைய சித்தத்தை நம் வாழ் வில் செய்யாதிருக்க வேண்டும் என்பதே எதிராளியாகிய பிசாசானவ னுடைய நோக்கமாகயிருக்கின்றது. ஆனால் சோதனையின் நாளிலே, நாம் பிசாசின் வஞ்சகமாக ஆலோசனைகளுக்கு இடங்கொடுக்காலும், மனிதர்களுடைய ஆலோசனைகளுக்கு நம்மை சமர்பிக்காமலும் இரு ந்து, தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, பொறுமையோடு தேவ னுடைய நேரத்திற்காக காத்திருந்து, ஜெபத்திலே தரித்தி ருக்கும் போது, நமக்கெதிராக சத்துருவின் ஆலோசனைகளை தேவன் அபத்த மாக்கிப் போடுவார்.

ஜெபம்:

பிதாவாகிய தேவனே, உம்முடைய ஆலோசனையே நிலை நிற்கும், நீர் சொல்ல ஆகும். நீர் கட்டளையிட நிற்கும். நான் உம்மைய திவ்விய ஆலோசனையிலே தரித்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்; 146:3-5