புதிய நாளுக்குள்..

தியானம் (தை 18, 2022)

நீதிமானின் கடிந்து கொள்ளுதல்

சங்கீதம் 141:5

நீதிமான் என்னைத் தயவாய்க் குட்டி, என்னைக் கடிந்து கொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்;


ஒரு வாலிபனொருவன், குறிப்பிட்ட கம்பனியின் தலைமையகத்திலே வேலை பார்த்து வந்தான். அவனுடைய மேற்பார்வையாளர் அவனு டைய வேலையின் குறைவான பகுதிகளை சுட்டிக் காட்டும் போது அவன் சினமடைந்து கொள்வதுண்டு. வருடத்தின் இறுதிப் பகுதியிலே, வேலை அதிகமாக இருந்ததால், அந்த வாலிபன் சில வேலைகளை பிழையாக செய்ததால், அவன் மேற்பார்வையாளர் அவனுடைய தவறை கண்டித்துப் பேசினார். அதனால், அவன் சாமர்;த்தியமாக, தலைமை யாகத்தைவிட்டு, இன்னுமொரு பட்டணத்திலுள்ள அந்த கம்பனி யின் கிளையொன்றிலுள்ள இன் னுமொரு வேலையை எடுத்துக் கொண்டு சென்று விட்டான். அவன் மனதிலே, தற்போது பிர ச்சனை முடிந்தது, இனி அந்த மேற்பார்வையாளரை சந்திக்கத் தேவை யில்லை என்று எண்ணிக் கொண்டான். ஆனால், அவனோ தன் பெல வீனத்திலிருந்து இன்னும் தன்னை மாற்றிக் கொள்ளவேயில்லை. மாத ங்கள் கடந்து சென்றதும், அவனுடைய முன்னிலையைக் குறித்த செய்தி, அவனுடைய தற்போதைய முகாமையாளருக்கு தெரிய வந்தது. அவனை அந்த கம்பனியிலிருந்து நீக்கி கொள்ளும்படியாக, அந்த முகா மையாளர், சமார்த்தியமாக, அவனுடைய பெலவீனமான பகுதியைக் குறித்தே பேச ஆரம்பித்தார்;. அவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒரு சில கிழமைகளிலே அவன் தன் வேலை யிலிருந்து இராஜினாமா செய்து கொண்டான். பிரியமானவர்களே, நித் திய ஜீவனுக்குரிய யாத்திரை நம்மிலே ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்த யாத்திரையானது நாம் உலகத்தின் எந்தப் பகுதிக்கு சென்றாலும் முடிந்து போவதில்லை. இந்த உலகத்திலுள்ள மனிதர்களுக்கு நாம் தப்பிச் சென்றாலும், கெர்சிக்கின்ற சிங்கம் போல யாரை விழுங்கலாம் என்று வகை தேடித்திரியும் எதிராளியாகிய பிசாசானவன் நம்முடைய பெலவீனமான பகுதியையே எப்போதுமே தாக்கிக் கொள்வான். நம்மு டைய நலனுக்காக நியமிக்க பட்ட ஊழியர்கள், மூப்பர்கள் நம்முடைய பெலவீனங்களை சுட்டிக் காண்பிக்கும் போது, மனதிலே வேதனைகள் நமக்கு உண்டாகலாம். நீதிமான் கள் நம்மை தயவாய்க் குட்டி, நம்மை கடிந்துகொள்ளவது நம் தலைக்கு எண்ணெயைப் போலிருக்கும்; ஆதலால் அந்த கடிந்து கொள்ளுதலை நம்முடைய சிந்தையிலே ஏற்றுக் கொள்ளுங்கள். அவை உங்களது கண் களை தெளிவு படுத்தும். நம் பெலவீனங்களை நாம் மேற்கொள்ள அது உதவி செய்யும்.

ஜெபம்:

பெலவீன நேரங்களிலே உதவி செய்யும் தேவனே, என் குறை களை பாராமுகமாக விட்டுவிடாதபடிக்கு தெளிந்த புத்தியுள்ளவர்களாக விழித்திருந்து, ஜெயங் கொள்ளத்தக்கதாக என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேது 5:6-8