புதிய நாளுக்குள்..

தியானம் (தை 17, 2022)

ஆவிக்குரிய போராட்டம்

நெகேமியா 4:14

அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, ...யுத்தம் பண்ணுங்கள் என்றேன்


ஒரு தேசத்தின் ராஜாவானவன், தன் ஒற்றர்களில் சிலரை அழைத்து, நீங்கள் போய் அயலிலேயுள்ள தேசம் எப்படிப்பட்டதென்றும் அதன் பாது காப்பு எவ்வளவு வலிமையாயுள்ளது? அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ? அவர்களுடைய பெலன் என்ன? அவர்களுடைய பெலவீனம் என்ன? என்று பார்த்து செய்தியை கொண்டு வாருங்கள் என்று அனுப்பி வைத் தான். அந்த ராஜாவானவன், அயல் தேசத்தை தாக்குதல் செய்து கைப்பெ ற்றும்படிக்கு, முதலில் அந்த அயல் தேசமானது எங்கே திறந்து கிடக்கி ன்றது என்று அறிந்து கொண்டு, அந்த தேசத்தின் திறந்து கிடக்கும் பெலவீனமான பகுதியிலே தாக்கு தலை ஆரம்பிப்பேன் என்று தன் இரு தயத்திலே தீர்மானம் செய்து கொண்டான். பிரியமானவர்களே, இதற் கொதத்தாகவே, நம்முடைய எதிராளியாகிய பிசாசானவனும், நம் வாழ்வின் பெலவீனமான பகுதிகளை அறிந்து, அங்கேயே நம்மை தாக்குதல் செய்வான். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்த கார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. தேவனுடைய பணியை நிறைவேற்று ம்படி வேலை செய்து வந்த நெகேமியா, எதிரிகள் யுத்தத்திற்கு ஆய த்தமாகின்றார்கள் என்று அறிந்த போது, எருசலேம் மதிலானது கட்டி முடியாமல், எங்கே பதிவாக இருக்கின்றது, எங்கே திறந்திருக்கின்றது என்று அறிந்து, அங்கே பெருங்காவல்களை நிறுத்தினார். மேலும் தன்னோடிருக்கின்ற பெரியவர்களையும் அதிகாரிகளையும்; நோக்கி: எதிரிகளுக்கு பயப்படாதிருங்கள் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவ மும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரருக்காக வும், உங்கள் குமாரருக்காகவும், உங்கள் குமாரத்திகளுக்காகவும், உங் கள் மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்பண்ணு ங்கள் என்றார். நாம் இந்த உலக முறைமைகளின்படி போராடுகின்ற வர்கள் அல்லர். நம்மை பெலப்படுத்தும் தேவனுடைய ஆவியானவர் நம் மோடிருக்கின்றார். எனவே, நாம் நம்மையும் நம்முடையவர்களையும் பிசாசின் கண்ணிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும்படிக்கு, விசுவாச த்தோடு ஊக்கமாக ஜெபத்திலே போராட வேண்டும்.

ஜெபம்:

என் பெலனாகிய தேவனே, பொல்லாங்கனுடைய சூழ்ச்சிகளை மேற்கொள்ளும்படிக்கு, விசுவாசத்திலே உறுதியாய் நிலைத்திருந்து, ஆவிக்குரிய போராட்டத்தில் ஜெயம் பெற என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 6:10-18