புதிய நாளுக்குள்..

தியானம் (தை 16, 2022)

எதிரான சத்துருவின் கிரியைகள்

சங்கீதம் 55:18

திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்


பல சவால்களின் மத்தியிலும், நெகேமியாவும் அவரைச் சேர்ந்தவர்க ளும் கட்டுமானபணிகளை தொடர்ந்தார்கள். எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்றும், இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டு வருகிறது என்றும் எதிரிகள் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலாகி, எருசலேமின்மேல் யுத்தம்பண்ண எல்லாரும் ஏக மாய் வரவும், வேலையைத் தடு க்கவும் கட்டுப்பாடு பண்ணினா ர்கள். கட்டுமானப் பணியில் நெகேமியாவோடு இருந்தவர் களோ: சுமைகாரரின் பெலன் குறைந்துபோகிறது ஆனால் இன்னும் செய்து முடிக்க வேண் டிய வேலையோ அதிகமாயிருக்கின்றது எனவே நாங்கள் அலங்க த்தைக் கட்டக்கூடாது என்றார்கள். அவர்களுடைய சத்துருக்களோவென் றால்: நாங்கள் உங்கள் நடுவே வந்து, உங்களை கொன்று போடுவோம் என்ற மிரட்டலின் செய்தியானது, பத்துவிசை நெகேமியாவிற்கும் அவர்க ளோடிருப்பவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. இவ்வண்ணமாகவே நம்மு டைய தனிப்பட்ட, குடும்ப, சமூக சபை வாழ்விலும், நாம் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறை வேற்றும் பாதையிலே, வேலையோ அதிகமாக இருக்கின்றது, ஆனால் நடத்தி முடிப்பதற்கு பெலனில்லை என்ற எண்ணங்கள் தோன்றலாம். நாம் செய்யும் வேலையை தடுத்து நிறுத்தும்படிக்கு, சத்துருவானவன், நம்மேல் எரிச்சல் அடைகின்றவர்க ளையும், நம்மை எதிர்த்து யுத்தம் செய்கின்வர்களையும், கட்டுப்பாடு பண்ணி மிரட்டல்களின் செய்திகளை விடுகின்றவர்களையும் ஏற்படுத்த லாம். இப்படிப்பட்ட சூழ்நிலையிலே தேவ மனிதனாகிய நெகேமியாவும் அவரோடிருந்தவர்களும், செய்து வந்த வேலையை விட்டுவிடாமல், தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, எதிரிகள் நிமித்தம் இரவும் பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தார்கள். அதுபோலவே நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை காத்துக் கொள்ளும்படிக்கு, நாம் நம்மு டைய சிந்தைக்கும், உதடுகளின் வாசலுக்கும் காவல் வைக்க வேண் டும். நம்முடைய இருதயமானது பொல்லாப்பான கிரியைகளை நடப்பி க்கும்படி இணங்காமல் நம் இருதயத்தைத் எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ள வேண்டும். அலையலையாய் பிரச்சனைகள் வந்தா லும், துணையாளராகிய ஆவியானவர் நமக்கு உதவி செய்யும்படி நம்மோடு இருக்கின்றார். தேவன் ஏற்படுத்திய வழிநடத்துதலுக்கு நாம் கீழ்படியும் போது, தேவன் தாமே நம்மை காத்து வழிநடத்துவார்.

ஜெபம்:

எத்தீங்கும் என்னை அணுகாமல் ஆத்துமாவைக் காக்கும் தேவனே, எதிரிகளின் வஞ்சகமான சூழ்ச்சிகளுக்கு நான் இடங்கொடா மல் என் இருதயத்தை நான் காத்துக் கொள்ள என்னை வழி நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 141:9