புதிய நாளுக்குள்..

தியானம் (தை 15, 2022)

வெற்றி வாழ்கையின் இரகசியம்

தானியேல் 6:10

தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.


இந்த சனிக்கிழமை நம்முடைய அக்காவினுடைய விசேஷpத்த நாள். படப் பிடிப்பாரோ காலையிலே ஆறு மணிக்கே வந்திடுவார் எனவே நாம் ஆய த்தமாக இருக்க வேண்டும் என்று மகனானவன் தன் பெற்றோரிடம் கூறினான். அதற்கு அவன் தாயார் மறுமொழியாக: மகனே, அந்த நேரம் நாம் தனித்தனியாக ஜெபிக்கின்ற நேரம், படம் பிடிக்கின்றவரை ஏழு மணிக்கு பின் வரச் சொல்லு என்று கூறினாள். அதற்கு மகனானவன்: அம்மா, அவர் ஊரிலேயே அதி சிற ந்த படப்பிடடிப்பாளர். அவருக்கு நேரமே கிடையாது ஆனால் என் நண் பனுக்கு அறிமுகமானதினாலே காலையிலே நேரத்தோடு வருவ தற்கு சம்மதித்துள்ளார். அக்காவி னுடைய திருமணத்திற்காக ஒருநாள் நாம் ஜெபிக்காவிட்டால் ஆண்டவர் இயேசு கோபித்துவிடுவாரா என்ன என்றான். அதற்கு தாயார்: மகனே, கடந்த 25 வருடங்களாக உன் அக்காவை காத்து வழி நடத்தி வந்த தேவனுக்கு, அவளுடைய விசேஷpத்த நாளிலே நன்றி சொல்லாமல் எப்படி அந்த நாளை ஆரம்பிப்பது. அதி சிறந்த படப்பிடிப்பாளர் இல்லா விட்டால், ஒரு சாதாரண படப்பிடிப்பாளரை பிடித்துக் கொள். வருகி ன்ற மங்களகரமான நாளிலே, ஆண்டவர் இயேவுக்கு நன்றி கூறி, அவ ருடைய ஆசியோடு நாம் அந்த நாளை ஆரம்பிக்க வேண்டும் என்று திட்டமாக தாயாரானவள் பதில் கூறினாள். பிரியமானவர்களே, நம்மு டைய வாழ்விலே, சர்வத்தையும் படைத்த தேவாதி தேவனோடு இடை படாமல், அனுதின ஜெபத்தை தவிர்த்துக் கொள்ளும் சாட்டுப் போக் குகள் என்ன? வேலை, வியாபாரம், படிப்பு, பிரயாணம், திருவிழா, விளையாட்டு, பொழுது போக்கு, வீட்டில் வரும் வருந்தாளிகள், உல்லா சப் பயணம், நித்திரை, நண்பர்கள், உறவினர்கள் என்ற நீண்ட பட்டியல் கொண்ட சாட்டுப் போக்குகளை ஜெபத்தை தடை செய்வதற்கு சில தேவ பிள்ளைகள் சொல்லிக் கொள்கின்றார்கள். ஒரு மனிதனானவன் எப்போது ஜெபிப்தையும், வேதம் வாசிப்பதையும் தன் வாழ்வில் இர ண்டாவது இடத்திற்கு தள்ளிவிடுகின்றானோ அன்று அவன் தன் வாழ் க்கையின் தோல்விக்கு அத்திபாரம் போடுபவனாக மாறிவிடுகிறான். நாட்டில்; தமது யுத்தங்களை முன்னெடுத்து சென்ற தேவனுக்கு பிரிய மான ராஜாக்கள், பல அலுவல்கள் உள்ளவர்களாக இருந்தார்கள். நாட் டை ஆளும் பொறுப்பு அவர்களிடம் இருந்தது. ஆனாலும் அவர்கள் தங் கள் வெற்றியின் இரகசியம் ஜெபம் என்று அறிந்தபடியால் அவர்கள் ஒரு நாளைக்கு பல தடவைகள் ஜெபித்தார்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி உம்மை நோக்கி விண்ணப்பம் பண்ணும் வாழ்க்கையை நான் விட்டுவிடாதபடிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 55:17

Category Tags: