புதிய நாளுக்குள்..

தியானம் (தை 14, 2022)

பிரயாணத்திற்கான ஆயத்தம்

1 தெச 5:17-18

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்;


தாங்கள் வசிக்கும் ஊரை நோக்கிப் பெரிதான அழிவொன்று வரவிருப் பதை அறிந்து கொண்டு, ஒரு குடும்பத்தினர், தங்கள் ஊரிலிருந்து, தூர த்திலுள்ள இன்னுமொரு ஊருக்கு செல்வதற்கு ஆயத்தப்பட்டார்கள். பிர யாணத்திற்கு வேண்டிய யாவையும், தங்கள் வாழ்வாதாரத்திற்கு தேவை யான பொருட்களையும் எடுத்துக் கொண்டு, அதிகாலமே புறப்பட்டு சென்றார்கள். போகும் வழியிலே ஒற்றயடிப் பாதைகளையும், கரடு முரடான வழிகளையும் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. மாலை நேரமாகி இருள் சூழ ஆரம்பித்த போது, செல்லும் பாதை தெளி வாக அவர்களுக்குத் தெரியவில் லை. ஒர் இடத்தில் சற்று தரித்து நின்று, பொதியை திறந்து, விளக்கை தேடினார்கள் ஆனால் அதைக் காணவில்லை. தாங்கள் செல்ல வேண்டிய வழிமுறைகளைக் கொண்ட வரைபடத்தை தேடினார்கள் அதையும் காணவில்லை. பிரயாணத்திற்கு பொதிகளை ஆயத்தம் செய்யும் போது, விளக்கையும், செல்ல வேண் டிய வழிமுறைகள் கொண்ட வரைபடத்தையும் அவர்கள் மறந்து போனா ர்கள். நன்றாக இருள் சூழ்ந்துவிட்டது. ஒற்றையடிப்பாதை, இரண்டு பக்கமும் வனவிலங்குகளும், சர்ப்பங்களு முள்ள காடு, எனவே பயம் அவர்களை ஆட்கொண்டது, அவர்களுக்கோ என்ன செய்வதென்று தெரி யவில்லை. இப்படியாகவே அனுதினமும் வேதத்தை வாசியாமலும், அனுதினமும் ஜெபிக்காமல் இருக்கின்ற மனிதனுடைய வாழ்வும் அமைகி ன்றது. பிரியமானவர்களே, நெகேமியா என்னும் தேவ தாசன், எருசலே மின் அலங்கத்தை கட்டும் போது, பல எதிர்ப்புக்கள் வந்தது. அந்த வேளையிலே அவர் முதலாவதாக தேவனை நோக்கி ஜெபம் செய்தார். அவர் தேவன் அவர்களுக்கென்று எழுதிக் கொடுத்த நியாயப்பிரமாணங் களை வாசித்து அறிந்தபடியினாலேயே, தாங்கள் தேவனைவிட்டு வழிவிலகிச் சென்றுவிட்டோம்; என்பதை அறிந்து கொண்டார். தேவனுடைய வசனமே நம்முடைய கால்களுக்குத் தீபமும், நாம் செல்லும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. ஜெபத்தின் வழியாக நாம் தேவனோடு இடைப்படுவதால் அவருடைய வார்த்தையின் மகத்துவங்களை அறிந்து கொள்கின்றோம். நம்முடைய வாழ்விலே உண்டாகும் சூழ்நிலைகளிலே தேவன் இடைப்படும்படியாக அவரை வரவழைக்கின்றோம். சோதனை களை ஜெயிக்கின்றோம், கீழ்படிதலை கற்றுக் கொள்கின்றோம். எனவே, எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண் ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணுங்கள். தேவ சித்தத்தை உங்கள் வாழ்வில் நிறைவேற்றுங்கள்.

ஜெபம்:

என்னை வழிநடத்திச் செல்லும் தேவனே, எதிராளியாகிய பிசாசானவனின் தந்திரங்களை ஜெயங் கொள்ளும்படிக்கு நான் எப்போதும் ஜெபத்திலே தரித்திருக்கும்படி எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன். ஆமேன்.

மாலைத் தியானம் - தானியேல் 6:10-11