புதிய நாளுக்குள்..

தியானம் (தை 13, 2022)

மனமடிவடைந்து போகாதிருங்கள்

பிலிப்பியர் 4:13

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல் லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு.


எருசலேமின் அலங்கத்தை சீர்திருத்தி கட்டும் கட்டுமானப்பணிகள் ஆரம்பமானது. கட்டுமான பணிக்காக தங்களை ஒப்புக் கொடுத்தவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் எழுந்து கட்டினார்கள். அந்த வேளையிலே, சன்பல்லாத் என்னும் எதிரி அதைக் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, ஏளனம் செய்யதான். அந்த அற்பமான ஜனங்கள் செய்கிறது என்ன, அவர்களுக்கு இட ங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்க ளோ, ஒருநாளிலே முடித்துப்போடு வார்களோ, சுட்டெரித்துப் போடப்ப ட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனை க்கும் முன்பாகச் சொன்னான். அப் பொழுது அவனுக்கு துணையாக இருந்த தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்க ளுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான். இப்படியாக சன்பல்லா த்தும், தொபியாவும் கட்டுகின்றவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசி, அவர்களை சமாரியாவின் ஜனங்களுக்கு முன்பாக அவமதித்து பேசி நிந்தித்தான். பிரியமானவர்களே, 'அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் இந்த உலகத்திலே துன்பப்படுவார்கள்' என்ற உண்மையை பரலோக யாத்திரிகளாக இந்த உலகத்தை கடந்து கொண்டிருக்கும் நீங்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும். தேவ ஊழியராகிய பவுலின் நாட்களிலே, அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் அவர்களுடைய வாழ் க்கையிலே, அந்தந்த பட்டணங்களிலுள்ளவர்களால் துன்பங்களும் பாடுகளும் உண்டாயிற்று. ஏன் எனக்கு இந்தப் பாடுகள், இவை வேண் டாம் என்று எதிர்கின்றவர்களோடு சேர்ந்து இந்த உலகிலே உல்லா சமாக வாழ்வோம் என்று ஒரு மனிதன் எண்ணுவானாகில், அவனுடைய எதிரிகளுடைய முடிவு எப்படியோ அப்படியே அவன் முடிவும் ஒன்றாக இருக்கும். பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகி றவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மென்மேலும் கேடு ள்ளவர்களாவார்கள். நாமோ, நம்மை பெலப்படுத்துகின்ற ஆண்ட வராகிய இயேசு கிறிஸ்துவினுடைய பெலத்தினாலே வெற்றி சிறக்கின்ற வர்களாக இருக்கின்றோம். வாழ்க்கையிலே உண்டாகும் துன்பங்களை கண்டு மனமடிவடைந்து விடாதீர்கள். நாம் அற்பமானவர்கள் என்று பின்னிட்டு திரும்பி விடாதிருங்கள். நமக்கிருக்கும் இந்த பெலத்தோடு முன்னேறுவோம் என்று தீர்மானித்தவர்களாய் முன்னேறுங்கள்.

ஜெபம்:

என் ஜீவனுள்ள தேவனே, சோர்ந்துபோகிறவனுக்கு நீர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரே. நான் மனமடிவடைந்து பின்னிட்டு திரும்பாமல் முன்னேற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாத் 15:2