புதிய நாளுக்குள்..

தியானம் (தை 12, 2022)

தீமையைக் கண்டு மருளாதிருங்கள்

பிலிப்பியர் 1:27

எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி,


பாடசாலைக்கு செல்லும் போது, நேர்த்தியாக உடுத்திக் கொண்டு சென்று அங்கே கருத்தோடு பாடங்களை படித்தால், அவர்களுக்கென்று ஒரு பட்டப் பெயரை வைத்து, அவர்களை ஏளனம் செய்யும்படிக்கு ஒரு சில மாணவர்கள் இருப்பார்கள். வேலைக்கு சென்று நீதி நியாயமாக வேலை செய்பவர்களை அகற்றிவிடும்படியாக முயற்சி செய்கின்ற சிலரும் இருப்பார்கள். இப்படியாக வாழ் விலே எந்த நன்மையான காரியத் தையும் செய்ய முயற்சிக்கும் போது ஏன் எதிர்ப்புக்கள் வருகின்றது என்று ஒரு வாலிபனானவன் தன் போதக ரிடம் கேட்டுக் கொண்டான். போதகர் அவனை நோக்கி: மகனே: இந்த உலகமானது பொல்லாங்கனுக்குள் இருப்பதால், தீமையானது மலிந்து போய் கிடக்கின்றது. இன்று சில நாடு களிலே, வேதம் தீமை என்று கூறும் காரியங்களை ஆதரிக்கும் சட்ட ங்கள் கூட அமுலிலிருக்கின்றது. அதைக் கண்டு நாம் பயந்து, தேவ நீதியை செய்வதிலே நாம் சோர்ந்து போகவேகூடாது என்று போதகரானவர் பதிலளித்தார். நெகேமியா என்னும் தேவ தாசனுடைய நாட்களிலும் கூட, அவன் எருசலேமிற்கு செல்வதற்கு, வழி பிரயாண த்திற்கு பாதுகாப்பாக, ராஜாவின் இராணுவச் சேர்வைக்காரரும், குதி ரைவீரரும் கூட அவனோடு சென்றார்கள். ராஜா தனக்கு கொடுத்த கடித ங்களை அவன், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகளிடத்துக்கு கொடுத்தான். இந்த சங்கதியெல்லாம் சன்பல்லாத்து என்னும் மனிதனும், அவனுக்கு உதவியாயிருந்த தொபியா என்பவனும் கேள்விப்பட்ட போது, தேவ ஜனங்களுடைய நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்க ளுக்கு மிகவும் விசனமாயிருந்தது. பிரியமானவர்களே, நீங்கள் நீதியின் வழிக்கு திரும்பும்படி தீர்மானம் செய்யும் போது, எதிராளியா கிய பிசாசானவன், தன்னுடைய ஊடகங்களாக சில மனிதர்களை உங்க ளுக்கு எதிராக எழச்செய்வான். நமக்கோ, இந்த உலகிலே கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்க ளும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, தேவ ஆவி யானவர் நம்மோடு இருக்கின்றார். நாம் பரிசுத்த வாழ்வு வாழ்ந்து நித் திய ஜீவனை பெற்றுக் கொள்ளாதபடிக்கு தடைகளை செய்வதே எதிரா ளியாகிய பிசாசானவனுடைய நோக்கம். எதிர்ப்புகள் பல மட்டங்களிலி ருந்து வந்தாலும், பரிசுத்த வாழ்விற்கும், தேவ நீதியை செய்வதற்கும் எதிராக வரும் எதிர்ப்புக்களைக் கண்டு நாம் மருளாமல், விசுவாசம் என் னும் கேடகத்தை உயர்த்திப்பிடித்தவர்களாய் முன்னேறிச் செல்வோமாக.

ஜெபம்:

அன்பும் பெலமும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை தந்த தேவனே, இந்த உலகத்திலே நம்மை எதிர்க்கும் தீமையான சக்திகளை கண்டு பயந்து பின்னிட்டு போகாதபடிக்கு என்னை பெலப்படுத்தி நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:9