புதிய நாளுக்குள்..

தியானம் (தை 11, 2022)

தேவனுடைய தயவுள்ள கரம்

நெகேமியா 2:8

என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.


தேவனாகிய கர்த்தருடைய கரமானது நெகேமியா என்ற மனிதனின்மேல் இருந்ததால், அவனுக்கு மகா ராஜாவின் கண்களிலே தயவு கிடைக்கு ம்படி தேவன் செய்தார். நெகேமியா ராஜா சமுகத்திலே நின்ற போது, ராஜா அவனைப் பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொ ன்றும் அல்ல என்றார்;. அந்நாட்களிலே, ராஜா சமுகத்திலே துக்கத்தின் ஆடை களோடும் (இரட்டு), துக்க முகத் தோடும் எவருமே செல்ல முடி யாது. அதனால், நெகேமியா மிக வும் பயந்து ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க. என் பிதாக்களின் கல்லறைகள் இருக் கும் ஸ்தலமாகிய நகரம் பாழான தும், அதின் வாசல்கள் அக்கினி யால் சுட்டெரிக்கப் பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத் தோடு இராதிருப்பது எப்படி என்றான். அப்பொழுது ராஜா அவனைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அவ்வேளையிலே நெகே மியா, பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனு ப்ப வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ராஜா அவன் வேண்டுதலைக் கேட்டு, அவனுக்கு தனது அனுமதியை வழங்கியது மட்டுமல்லாமல், பாழாய் கிடைக்கும் இடங்களை சீர்திருத்த வேண்டிய மரங்கள் யாவை யும் கொடுக்கும்படி, ராஜாவின் வனத்துக் காவலாளனுக்கு கடிதம் வாயிலாக கட்டளையிட்டார். பிரியமானவர்களே, ஒரு மனிதனானவன், தன் வாழ்வு சீரடையவேண்டும், நான் மறுபடியும் தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று பாவ அறிக்கை செய்து, அனுதின மும் கருத்தோடு பரிசுத்த வேதாகமத்தை வாசித்து, தியானித்து, ஜெபி த்து வந்தால், அவன் மனதிலே அமைதி ஏற்பட ஆரம்பிக்கும். அவன் வாழ்க்கையிலே பூட்டப்பட்டிருந்த கதவுகள் திறக்கப்படும். அது மட்டு மன்றி அவன் வாழ்விலே மனித தயவுகள் உண்டாகும்படி தேவனா னவர் அனுக்கிரகம் செய்வார். தேவனுடைய சித்தத்திற்கு நாம் நம்மை ஒப்புக் கொடுக்கும் போது, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி, நாம் செய்ய வேண்டியவைகளைக் குறித்த விருப்பத்தையும் செய்கையையும் நம்மில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.

ஜெபம்:

பரலோகத்தின் தேவனே, உம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் என்னிலே உண்டாக்குகின்றவரே, உம்முடைய சித்தத்தை நான் நிறைவேற்றி முடிக்க எனக்கு உதவி செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:13