புதிய நாளுக்குள்..

தியானம் (தை 10, 2022)

நெகேமியாவின் ஜெபம்

நெகேமியா 1:4

நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவா சித்து, மன்றாடி,


உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையோ, குடும்ப வாழ்க்கையோ, சமூக சபை வாழ்க்கையோ, அடிமைத்தனதிலிருந்துசீர்திருத்தப்பட வேண்டிய இடங் கள் இருந்தால், நெகே மியாவாகிய தேவ ஊழியர் செய்த ஜெபத்தைப் போல, கருத்துதோடு ஜெபம் செய்யுங்கள். நெகேமியா, தன் தேசம் பாழாய் கிடைப்பதை அறிந்த போது, 1. உட்கார்ந்து அழுது, 2. சில நாளாய்த் துக்கித்து, 3. உபவாசித்து, 4. தேவனை நோக்கி மன்றாடி னார். தேவனுடைய குறித்த நேரம் வரும்வரைக்கும், ஏறத்தாழ நாலு மாதங்களாக இரவும் பகலும், தன் தேசமானது சீர்திருத்தப்பட வேண் டும் என்பதே அவருடைய மன்றாட் டாக இருந்தது. அவர் தேவனை நோக்கி மன்றாடும் போது, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்ப னைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக் கையையும் கிரு பையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே என்று தேவனுடைய ஆசீர்வாதத்தின் வாக்குத்தத்தத்தை அறிக்கையிட்டார். உம்முடைய ஜனங்களாகிய நாங்கள் உமக்கு விரோ தமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கி றதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக என்று, தேவனுடைய சமுகத்திலே எந்த நிபந்தனையும் இல்லாமல், தானும்; தன் ஜனங்களும் செய்த பாவங்களையும், நியாயக் கேடுகளையும்; ஏற்றுக் கொண்டு, தேவனுடைய கட்டளைகள் கைகொள் ளாதே போனோம் என்றும் பாவ அறிக்கை செய்தார். அதன் பின்னர் தேவனுடைய நீதியை யும் அவருடைய சீர்திருத்தத்தின் வாக்குத்தத்தை யும் குறித்து அறி க்கை செய்தார். அதாவது, நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங் களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும், நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவ ர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிரு ந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்து கொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டு வருவேன் என்றும் தேவரீர் உம்முடைய ஜனங்களுக்கு கட்டளையிட்ட வார்த்தையை நினை த்தருளும். தேவனால் எல்லாம் கூடும் என்று அவருடைய வல்லமை யையும், தமக்கு பயப்படுகின்றவர்களுடைய ஜெபத்தை தேவன் கேட் பார் என்பதையும் அறிக்கை செய்தார். அதுபோல நீங்களும் நெகேமி யாவைப் போல தேவனிடத்திலே மன்றாடி அவருடைய வழிடத்துதலு க்காக பொறுடையோடு காத்திருங்கள்.

ஜெபம்:

பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, என்னுடைய வாழ்க் கையிலுள்ள உமக்கு பிரியமற்ற, மறைவான காரியங்களிலிருந்து நான் விடுதலையடையும்படி எனக்கு உதவி செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:5