புதிய நாளுக்குள்..

தியானம் (தை 09, 2022)

பாழானவைகளை திரும்ப கட்டுவோம்

பிலிப்பியர் 2:5

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;


பண்டைய காலத்திலே, பெர்சியா ராஜ்யம் மகா பெரிதாயிருந்தது. அங்கே கைதிகளாக கொண்டு செல்லப்பட்ட தேவ ஜனங்கள், அங்கேயே வாழ் ந்து வந்தார்கள். அவர்களில் சிலர், வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்த போதும், தங்களது சிறையிருப்பின் வாழ்க்கையை விரும்பாமல், தேவனாகிய கர்த்தர் தமக்கென்று கொடுத்த ஸ்தானத்திற்கு திரும்ப வேண்டும் என்ற மனதுடையவர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒரு வராகிய நெகேமியா என்னும் மனித னானவர், மகா ராஜாவின் அரண்ம னையிலே, ராஜாவிற்கு பானபாத்திர க்காரனாக இருந்து வந்தார். ஆனா லும், தேவன் என்னை சிறையிருப்பு க்கு அனுமதித்தார் எனவே நான் இரு க்குத் ஸ்தானத்திலே சுகமாய் என்பாட் டிற்கே இருப்பேன் என்று சிறை யிருப்பில் இருக்க அவர் விரும்பமாமல், தான் தன்னுடைய ஸ்தானமா கிய எருசலேமிற்கு திரும்பி பாழானவைகளை திருப்பிகட்ட வேண்டும் என்று மனதிலே வாஞ்சையுள்ளவராக இருந்தார். இன்றைய நாட்க ளிலே, பலர் அடிமைத்தன கட்டுகளிலே அகப்பட்டிருக்கின்றார்கள். ஆண் டாண்டுகளாக தேவ பிள்ளைகளாக இருக்கின்றோம் என்று சொல்லிக் கொள்ளும் மனிதர்களில் சிலர்கூட மறைவான பாவ கட்டுக்குள் அடிமை களாகவே வாழ்ந்து வருகின்றார்கள். அடிமைத்தனத்தின் சிறையிருப்பு க்களுக்குள் அகப்பட்டு, தேவன் கொடுத்த அருமையான சுதந்திரமான வாழ்க்கையை பாழாக்கிவிடுகின்றார்கள். பிரியமானவர்களே, என்னு டைய வாழ்க்கை சிறப்பாக இருக்கின்றது, இது என்னு டைய பிரச்சனை யல்ல, நான் ஏன் என்னை பிரச்சனைக்குள் மாட்டிக் கொள்ள வேண்டும் என்று தங்கள் சுயபோக்கிலே அவர்கள் சிந்திக்கின்றார்கள். இது நம்மு டைய ஆண்டவராகிய கிறிஸ்துவுக்கு இருந்த சிந்தையாகுமா? இல்லை. நாம் நெகேமியா என்னும் மனிதனைப் போல, நாம் இருக்கும் ஸ்தான த்திலே திருப்தியடையாமல், பாழானவைகளை திரும்பக் கட்டத்தக்க தாக, வாஞ்சையுள்ளவர்களாக நாம் மாற வேண்டும். நம்மு டைய ஆண் டவராகிய இயேசு, பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்து, தாம் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மை த்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனித குலம் பாவ த்திலிருந்து விடுதலையடைந்து சீர் வாழ்வு வாழும்படியும், பாழான வாழ்;க்கை, பயனுள்ளதாக மாறும்படிக்கும், அவர் மனுஷர் சாயலானார். நாமும் பாழானவைகளை சீர்திருத்தும்படிக்கு பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்கு நம்மை ஒப்புக் கொடுப்போமாக.

ஜெபம்:

என்மீது அன்புகூர்ந்த பிதாவாகிய தேவனே, உம்முடைய திருச்சித்தம் இந்த பூமியிலே நிறைவேறும்படிக்கு, பாழானவைளைக் திரும்ப கட்டுப்படும்படிக்கு என்னை நான் ஒப்புக் கொடுக்கின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:12-13