புதிய நாளுக்குள்..

தியானம் (தை 08, 2022)

பூரண விடுதலை தருபவர்

ஓசியா 6:1

நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.


பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரினால் சிறை பிடித்து பாபிலோனுக்கு கொண்டு செல்லும்படி தேவனால் அனுமதிக்கப்பட்ட ஜனங்கள், அங்கு அவர்களுக்கிருந்த சுதந்திரம் பறிக்கப்பட்டு, அந்நிய தேசத்திலே சிறையிருப்பின் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். இந் நாட்க ளிலே நாம் தேசங்களினால் சிறைப்பிடிக்கப்பட்டு கொண்டு போகப் படுவது மிகவும் அரிதான காரியம். ஆனாலும் சில தேவ பிள்ளைகள், அவர்களுடைய தொடர்ச்சியான மன க்கடினத்ததினாலும், கீழ்படியாமையி னால், ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்வை விட்டு, சிறைவாழ்விற்கு அனு மதிக்கப்படுகின்றார்கள். ஒரு ஊரில் வாழ்ந்து வந்த மனிதனான வர், வயதுக்கு வந்தும், நெறிமுறை தவறிய வாழ்க்கை வாழும் தனது இளைய மகனை நோக்கி: நீ இந்த வீட்டில் வசிக்க விரும்பினால், நீ நினைத்த பிரகாரமாய் வாழ முடியாது, இந்த வீட்டிலுள்ள வழிமுறை களை உன் அண்ணன் கைக்கொண்டு நடப்பது போல நீயும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். பல தடவைகள், அவன் தகப் பனானவர் அதைக் கூறிக் கொண்டே இருந்ததால், ஒரு நாள் இளை யவன், மிகவும் கோபமடைந்தவனாய், தன் தகப்பனானவரை நோக்கி: இந்த வீட்டிலே நான் அடிமையைப் போல சிறைவாழ்வு வாழ விரும்ப வில்லை என்று கூறிவிட்டு, தன் தகப்பன் வீட்டைவிட்டு சுதந்தரமாய் வாழ வேண்டும் என்று தன் நண்பர்களோடு ஒரு வாடகைவீட்டிலே வாழு ம்படி சென்றான். என் அப்பா என்னைத் தள்ளிவிட்டார். என் தகப்பனுக்கு நான் வாழ்ந்து காட்டுகின்றேன் என்று தகப்பனுக்கு பிரியமில்லாத காரி யங்களை அதிமாக செய்து வந்தான். இனி என்ன என்; நண்பர்களோடு வசிக்கின்றேன் எனவே இனி அவர்களில் ஒருவனாக வாழ்ந்து கொள் வேன் என்று அவர்களின் தவறான வழிகளிலே அவன் நடந்து வந்தான். அவனுக்குண்டான சுதந்திரத்தால் அவனுக்கு வந்த பலன் என்ன? அடிமைத்தனத்தின் சிறை வாழ்வே அவனுக்கு உண்டாயிருந்தது. பாபி லோனுக்கு சிறைப்பட்டு போன மனிதரகளில் சிலர் இந்த இளைய மகனைப் போல மேலும் மனத்தைக் கடினப்படுத்தாலும், தங்களுடைய தவறான வழிகளுக்காகவும், தங்கள் சந்ததியினரின் உணர்வற்ற வாழ்க் கைக்காவும், மனம் வருந்தி, தேவனிடம் தங்கள் இருதயங்களை திரு ப்பினார்கள். தேவனானவர் தாமே மனதிரங்கி அவர்கள் சிறையிருப்பை நீக்கி, அவர்களை அவர்களது தேசத்திற்கு திரும்பப் பண்ணினார். பிரிய மானவர்களே, உங்கள் மனதைக் கர்த்தரிடத்தில் திரும்புங்கள் அவர் பூரணமான விடுதலையை தந்து நடத்துவார்.

ஜெபம்:

கடையான திசைமட்டும் திறத்துண்டிருந்தாலும் கூடிச் சேர்க்கும் தேவனே, கீழ்படியாமையின் வாழ்வு தேவ பிள்ளைகளுக்கு உகந்ததல்ல என்பதை உணர்ந்து மனதை கடினப்படுத்தாதபடிக்கு காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஆமோஸ் 9:14-15