புதிய நாளுக்குள்..

தியானம் (தை 07, 2022)

உங்களிலிருக்கிறவர் பெரியவர்

1 யோவான் 4:4

ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.


பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உரு வாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக் கிறீர் என்று தேவனுடைய தாசனாகிய மோசே தேவனாகிய கர்த்தரை குறித்து கூறியிருக்கின்றார். நம்மை அழைத்த தேவாகிய கர்த்தர், நேற் றும், இன்றும், என்றும் மாறாதவராய், இருக்கின்றவராய் இருக்கின்றார். கடந்த வருடத்திலே அவர் எப்படியிருந்தாரோ, இந்த வருடத்திலும் அவர் அப்படியியே இருக்கின்றார். அவர் விளம்பிய நித்திய வாழ்வு தரும் வேதமும் அப்படியே இருக் கின்றது. காலத்தை கடந்த அவரு டைய ஆளுகைக்கு முடிவி ல்லை. தேவனாகிய கர்த்தராலே சிருஷ;டி க்கப்பட்ட, மேன்மையான ஸ்தானத் திலே வைக்கப்பட்ட தேவ தூதனொருவன், தனக்கு தேவன் கொடுத்தி ருந்த ஆதிமேன்மையை மறந்து, பெருமை கொண்டதால், அவனுடைய பொல்லாப்பினால் அவன் தள்ளப்பட்டு, அவனும் அவனோடு சேர்ந்தவர் களும் பிசாசுகளாகினார்கள். அந்தப் பிசாசானவன், தள்ளப்பட்டுப் போன நாளிலிருந்து, இந்த நாள்வரையும், இனி அவன் நியாயந்தீர்க்கப்பட்டு, அக்கினிக் கடலிலே தள்ளப்படும் நாள்வரைக்கும், அவன் வஞ்சிக்கிறவ னாகவே இருக்கின்றான். கடந்த வருடத்திலே அவன் எப்படி இருந் தானோ, இந்த வருடத்திலும் அவன் அப்படியே இருக்கின்றான். அவனு டைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே. இந்த உலக மும் அதன் போக்குகளும் பொல்லாங்கனாகிய பிசாசாவனுக்குள் இருக் கின்றது. கடந்த ஆண்டில் இருந்ததைப் போலவே இந்த ஆண்டிலும் இரு க்கும். அதாவது, பிசாசானவனின் வஞ்சகமும், இந்த உலகிலெ நம்மை எதிர்க்கும் சக்திகளும், யாவுமே அப்படியே இரு க்கின்றது. அவை களை முற்றிலும் ஜெயங்கொண்ட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ நம்மோடிருக்கின்றார். ஜெயங்கொண்டவரின் நாமத்தின்மேல் நாம் கொண் டுள்ள விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். எனவே, நாம் கிறி ஸ்துவுக்குள் வெற்றி வாழ்க்கை வாழ வேண்டுமாயின், நம்முடைய மனம் புதிதாக வேண்டும். இந்த உலகத்திலிருப்பவனைப் பார்க்கிலும் நம்மோடிருப்பவர் பெரியவர் என்று விசுவாசித்தால், நம்முடைய கருத் துக்களின்படியும் உணர்வுகளின்படியும் நம்முடைய தீர்மானங்களை எடு ப்பதைவிட்டு விட்டு நம் வாழ்க்கையை என்றும் மாறாத ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளுக்கு நிபந்தனையின்றி விசுவாசத்தோடு ஒப்புக் கொடுக்க வேண்டும். விசுவாசத்தோடு ஜெபத்திலே தரித்திருந்து, தேவனுடைய நேரத்திற்கு காத்திருக்க பழகிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர் என்பதை விசுவாசித்து, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 கொரி 2:11