புதிய நாளுக்குள்..

தியானம் (தை 05, 2022)

முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்கள்

எபேசியர் 6:11

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.


ஒரு திருடனானவனோ, குறிப்பிடப்பட்ட வீடொன்றிற்குள் கன்னமிட்டு திருடும்படிக்கு, முதலில் தான் இலகுவாக உடைத்து உட்பிரவேசிக்கக் கூடிய வழியையே ஆராய்ந்து அறிந்து கொள்வான். நாம் நம்முடைய வீட்டிற்குள் திருடன் வருவான் என்று அனுதினமும் திகிலடைந்து, அதை யே நாம் சிந்தித்துக் கொண்டிருப்ப தில்லை. ஆனால், நம்முடைய வீட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதைக் குறி த்து நாம் கரிசணையற்றவர்களக இருக் கமுடியாது. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் கூட நம்முடைய பெல வீனங்கள் என்ன என்பதையும், நம்மு டைய எதிரி யார் என்பதையும் நாம் அறிந்து அதன்படிக்கு நம் வாழ்வை காத்துக் கொள்ள வேண்டும். நம்மு டைய எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கின்ற சிங்கத்தைப் போல யாரை விழுங்கலாமென்று வகை தேடி சுற்றித் திரிகின்றான் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. நம் முடைய எதிரி பிசாசானவனே, ஆனால் அவன் தன்னுடைய தந்திரத்தி ற்கு இடங்கொடுக்கும் மனிதர்கள் ஊடாகவே நம்மிடத்திலே வருவான். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோ டும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிக ளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனை களோடும் நமக்குப் போராட்டம் உண்டு. நாம் நாடு விட்டு நாடு சென் றாலும், நம்முடைய பெலவீனமான இடத்திலேயே, எதிராளியாகிய பிசா சானவன் தாக்குதல் செய்வான். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பெலவீனங்கள் என்ன என்பதை அறிந்து, அந்தப் பகுதியிலே மிகவும் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டும். சிலருக்கு அது குறிப்பி ட்ட பாவ பழக்கங்களாக இருக்கலாம் வேறு சிலருக்கு யாரும் காணாத தாயிருக்கும் மனதிலேயுள்ள எரிச்சல், வன்மம், கசப்பு போன்றவைக ளாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு, தங்கள் குடும்பமாக இருக்க லாம். அதாவாது, தங்கள் குடும்பத்தைப் பற்றி ஏதாவது குறைகள் யாரும் கூறினால் போதும், அவர்கள் ஆண்டவராகிய இயேசு கொடுத்த இரட்சிப்பையே தூக்கி எறிந்து விடுவார்கள். பிரியமானவர்களே, கடந்த ஆண்டிலே நீங்கள் விழுந்து போன இடங்கள் எவை என்று பார்த்து, பிசாசின் தந்திரங்களை ஜெயிக்கும்படிக்கு தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து அதைக் கைக்கொள்ளுங்கள். பெலவீனங்களை மேற்கொள் ளுங்கள்.

ஜெபம்:

பலங்கொண்டு திடமனதாயிரு என்று கூறிய தேவனே, நீர் என்னோடிருப்பதற்காக நன்றி. நான் உம்முடைய வார்த்தையில் நிலைத்திருந்து ஜெயம் கொள்ள பிரகாசமுள்ள மனக் கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 16:33