புதிய நாளுக்குள்..

தியானம் (தை 04, 2022)

வாழ்வில் உண்டாகும் மாற்றங்கள்

2 கொரிந்தியர் 5:17

பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.


வாழ்வில் சுபீட்சத்தைத் தேடும்படிக்கு, மனிதர்கள் தங்கள் சூழ்நிலை கள், சுற்றாடலை மாற்றிக் கொள்கின்றார்கள். ஒரு தேசத்தைவிட்டு இன் னுமொரு தேசத்திற்கும், பட்டணத்தைவிட்டு இன்னுமொரு பட்ட ணத் திற்கும், வீட்டை விட்டு இன்னுமொரு வீட்டிற்கும், வேலையை விட்டு இன்னுமொரு வேலைக்கும், இப்படியாக தங்கள் வாழ்க்கையிலே தங் கள் குறிக்கோளை அடையும்படிக்கு முயற்சி செய்கின்றார் கள். இவை களினால் ஒரு மனிதனுக்கு பலனி ல்லை என்றும், சுற்றாடல், சூழ்நிலை களை மாற்ற முயற்சி செய்வது முற்றி லும் தவறானது என்றும் கூறிவிட முடி யாது. நல்ல மனதோடு இவைகளை தேவ வழிநடத்துதலின்படி செய்கின்ற வன் அதற்குரிய பலனை நிச்சயமா கவே கண்டடைவான். எடுத்துக்காட்டாக, மோசம் போக்கும் பழக்க வழ க்கங்களுக்கு அடிமையாகிய ஒரு மனிதனானவன், புதிய ஆண் டிலே, தன்னை துன்மார்க்கத்திற்கு நடத்தும் நண்பர்களையும், உறவுகளையும் விட்டு தன்னை விலக்கிக் கொள்ளும்படிக்கு, தான் வசிக்கும் ஊரிலி ருந்து, தூரத்திலுள்ள இன்னுமொரு ஊருக்கு சென்றான். அது ஒரு நல்ல எண்ணம், நல்ல முயற்சி ஆனாலும் அவன் தன் சுற்றாடலை மாற் றிக் கொண்டானே தவிர, அவன் தன் வாழ்க்கையின் வழிமுறைகளை மாற்ற மனதில்லாதவனாக இருந்தான். புதிய இடத்திலே, அந்நியர்கள் மத்தியிலே, அவன் யாரைத் தனக்கு புதிய நண்பர்களாக்கிக் கொள்ளப் போகின்றான்? அவன் வசித்து வந்த அவன் சொந்த ஊரிலே, அவனு டைய நலனுக்காக உண்மையாகவே குரல் கொடுக்கும் சில நண்பர்களும் உறவுகளும் இருந்தார்கள். அவர்களுடைய ஆலோசனைகளை கேட்பத ற்கு அவனுக்கு மனதில்லாதிருந்தது. கடந்த ஆண்டிலே செய்தவைகள் பலனலிக்கவில்லை எனவே இந்தப் புதிய ஆண்டிலே வாழ்க்கையிலே சில மாற்றங்களை அவன் உண்டு பண்ணினான். ஆனால் அவன் தன் மன தை மாற்றி, தேவ ஆலோசனைகளுக்கு கீழ்படிய மனதில்லாதவனாக இருந்தால், புதிய ஆண்டானது அவனுக்கு உதவப் போவதில்லை. பிரிய மானவர்களே, முதலாவதாக, உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிட க்கிறதென்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே சுற்றாடலை மாற்றுவதுடன் நின்றுவிடாமல், முதலாவதாக, நாம் நம் மனதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷடி யாயிருக்கிறான். அவனே தன் பழைய வாழ்க்கை முறைமைக்குரிய வழிகளை; விட்டு புதிதும் ஜீவனுமான வழியலே செல்கின்றான்.

ஜெபம்:

நித்திய வாழ்வை கண்டடையும்படி புதிதும் ஜீவனுமான வழியை காண்பித்த தேவனே, இந்த ஆண்டிலே ஆகாத காரியங்களைவிட்டு என் மனதிலே நீர் விரும்பும் மாற்றங்கள் ஏற்பட கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:2