புதிய நாளுக்குள்..

தியானம் (தை 03, 2022)

காத்திருக்க கற்றுக் கொள்ளுங்கள்

ஏசாயா 40:31

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்;


இந்த வருடம் எனக்கு பதினெட்டு வயதாகின்றது. என்னுடைய நண்பர் களில் சிலர் மோட்டார் சைக்கிள் வைத்திருக்கின்றார்கள். அடுத்த மாதத்தின் முடிவுக்குள் எனக்கு நீங்கள் ஒரு மோட்டர் சைக்கிள் ஒன்றை வாங்கி தர வேண்டும் என்று ஒரு இளைஞன் தன் பெற்றோரிடம் வேண் டிக் கொண்டான். அவன் குறிப்பிட்ட நாட்கள் கடந்து, அவன் பிறந்த நாளும் வந்தது. ஆனால் அவன் பெற் றோரோ, வசதியுள்ளவர்களாக இருந்த போதும், மகனானவன் கேட்ட படி அவனுக்கு மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொடுக்கவில்லை. தங்கள் மகனை நேசித்த அந்தப் பெற்றோர் அவனுடைய தேவையையும், பரு வத்தையும், அதனால் உண்டாகக்கூடிய பொல்லாப்புக்களையும் அறிந்தபடியால், அவனுடைய நன்மை கருதியே, அதை வாங்கிக் கொடுக்க மறு த்தார்கள். தான் கொடுத்த கால எல்லலைக்குள், தான் கேட்ட காரியம் கைகூடிவராததால், மகனானவன் தன் பெற்றார்மீது கோபமடைந்தான். தனக்கு ஒன்றுமே இனித் தேவையில்லை, இனி தான் ஒன்றும் கேட்கப் போவதில்லை என்றும் கசப்படைந்தான். பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு நன்மையான ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கின்றா ர்கள் என்று கூறும் போது, பிள்ளைகள் கேட்பதையெல்லாம் பிள்ளைகள் எண்ணப்படி, அவர்கள் குறித்த காலத்திலே வாங்கிக் கொடுப்பதென்பது பொருளல்ல. அதைவிட மேலாக, நம்முடைய பரம பிதா நம் முடைய தேவைகளையும் அறிந்திருக்கின்றார். அவர் ஒருவரே தகுந்த காலங்களையும் அறிந்தவறாயிருக்கின்றார். சில வேளைகளிலே, நாமும் கால அவகாசங்களை வைத்து, பிதாவே நீர் எனக்கு இதை செய்ய வேண்டும் அல்லது அதை தர வேண்டும் என்று ஜெபித்து வருவதுண்டு. ஆனால் பூரண மனவிருப்பத்தோடு, உம்முடைய சித்தமே என்னில் நிறை வேற வேண்டும் என்னும் அறிக்கையானது நமது ஜெபத்தில் இருப்பதில்லை. நாம் கேட்ட காரியங்கள், நம்முடைய நேரப்படி கிடைகாது போகும் போது, பரம பிதாவோடு நொந்து கொள்கின்றோம். பிரியமா னவர்களே, கர்த்தருக்கு காத்திருப்பது என்பது நாம் அவருக்கு கால அவகாசங்கள் கொடுப்பதல்ல. நமக்கு நன்மையானது எது என்பதை அவர் ஒருவரே அறிந்திருக்கின்றார். அவருடைய சித்தத்தை நம் வாழ் வில் நிறைவேற்றுவது நமக்கு முடிவில்லாத நன்மையை உண்டாக்கும். எனவே, பொறுமை யோடு தேவனாகிய கர்த்தருடைய நேரத்திற்காகக் காத்திருங்கள்.

ஜெபம்:

பிதாவாகிய தேவனே, நான் எதையாகிலும் உம்முடைய சித்த த்தின்படி கேட்டால், நீர் எனக்குச் செவிகொடுக்கிறாவராயிருக்றீர். உம் முடைய நேரத்திற்காக காத்திருக்கும் பொறுமைய எனக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 யோவான் 5:14