புதிய நாளுக்குள்..

தியானம் (தை 02, 2022)

தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார்

ஏசாயா 49:13

கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார்.


ஒரு தாயானவள், கடந்ததை நினைத்து மனம் கசந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். புதுவருடத்தின் பரபரப்பும் ஆரவாரமோ ஓய்ந்து விட் டது ஆனால் அவள் மனதிலிருந்த காயங்கள் மட்டும் இன்னும் ஆறவி ல்லை. ஒருவேளை கர்த்தர் என்னை கைவிட்டாரோ? அவர் என் கண்ணீரை காணாதபடிக்கு தம் முகத்தை மறை த்துக் கொண்டாரோ? என்ற எண்ணங் களும் அவள் மனதிலே அவ்வப்போது தோன்றிற்று. இப்படியாகவே, ஒரு சமயம் தேவனாலே தெரிந்து கொள் ளப்பட்ட ஜனங்களும் எண்ணினார் கள். வாக்குமாறாத அன்புள்ள தேவ னானவரோ அவர்களுக்கு உரை த்ததாவது: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள். ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரை ந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது என்று கூறினார். தேவனாகிய கர்த்தர்தாமே, நம்முடைய வாழ்க்கையிலே எமக்கு மலைகளாக தோன்றும் பிரச்சனைகளை, நாம் நடந்து செல்லும் வழிகளாகவும், தாம் நம்மை நடத்திச் செல்லும் பாதைகளாகவும் மாற்று வதற்கு சர்வ வல்லயுள்ளவராக இருக்கின்றார். நாம் கர்த்தரையே நம்மு டைய பெலனாக கொண்டிருப்பதாலும், நம்முடைய இருதயங்களிலே தேவனுக்கு உகந்த செவ்வையான எண்ணங்கள் இருப்பதாலும் நாம் பாக்கியவான்களாக இருக்கின்றோம். நம்முடைய பெலனானது சர்வ வல்ல மையுள்ள தேவனில் இருப்பதால், நாம் அழுகையின் பள்ளத்தா க்கைகூட உருவ நடந்து அதை வளமிக்க நீரூற்றாக்கிக்கொள்ளுவோம். நாம் பலத் தின்மேல் பலம் அடைந்து, தேவசந்நிதியில் காணப்படு வோம். தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிரு பையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களு க்கு நன் மையை வழங்காதிரார். எனவே உங்கள் நிலைமையை நன் றாக அறிந்த தேவனாகிய கர்த்தர் உங்களைக் கைவிடமாட்டார். அதை உங்கள் வாயினாலே அறிக்கையிடுங்கள். உங்களைப் பெயர் சொல்லி அழைத்த கர்த்தரால் நீங்கள் ஒருகாலமும் நீங்களும் மறக்கப்படுவ தில்லை. ஆறுதல் செய்கின்றவர் உங்களோடிருக்கின்றார். சேனைக ளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

ஜெபம்:

சகலவித ஆறுதலின் தேவனே, நான் கடந்து வந்தவைகளிலே நான் தரித்து நின்றுவிடாமலும், நீர் இந்த ஆண்டிலே என் வாழ்விலே உம்மு டைய திருச் சித்ததத்தை நிறைவேற்றும்படி என்னை பெலப்படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 கொரி 1:3-5