புதிய நாளுக்குள்..

தியானம் (தை 01, 2022)

வற்றாத நீருற்றைப்போலிருப்பாய்

ஏசாயா 58:11

நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும்இ வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்


கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போல வும் இருப்பாய் என்பது தேவன் தம் ஜனங்களுக்கு கொடுத்த வாக்குத் தத்தம். அவருடைய வாக்குத்தத்தங்கள் என்றும் மாறாதவைகள். புதிய ஆண்டிலே, பல எதிர்ப்பார்புக்க ளோடு காலடி எடுத்து வைக்கும் நம க்கு, இந்த ஆண்டிலே நமக்கு முன் பாக என்ன காத்திருக்கின்றது என நாம் அறியோம். ஆனால், காலங்க ளை அறிந்தவர் நம்மோடிருந்தால் நம் முடைய இருதங்கள் கலங்கத் தேவை யில்லை. இருள் சூழ்ந்து கொண்டி ருக்கும் இந்த உலகத்திலே, நம்முடைய வெளிச்சம் எழும்பி பிரகா சிக்கும்படி தேவனுடைய வார்த்தைகளுக்கு செவி கொடுப்போம். தேவ னுக்கு உகந்த உபவாச நாட்களை நாம் நியமிக்கக்கடவோம். 'அக்கிர மத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல் களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக் கிவிடு கிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும், பசியுள்ளவ னுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறு மையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லா தவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்ச மானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். அப்பொழுது விடியற்கால வெளுப் பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லை யும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி, பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்து மாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும்' என்று தேவனாகிய கர்த்தர் உரைத்திருக் கின்றார். கர்த்தருடைய நாளை கனப்படுத்துங்கள். பரிசுத்த அலங்காரத் தோடு நித்தமும் அவர் சமுகத்தை நாடுகள். இந்தப் புதிய ஆண்டிலே உங்களுக்கு முன்னாக இருக்கும் சவால்களை ஜெயங்கொள்ளுங்கள்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, அனுதினமும் உம்முடைய சமுகத்திற்கு வருவதை மனமகிழ்ச்சியின் நேரம் என்று நான் அறிக்கையிட்டு உம்மு டைய பிரசன்னத்தை வாஞ்சையோடு நாட என்னை உணர்வுள்ளவ னா(ளா)க்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:1-6