புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 31, 2021)

கரம்பிடித்து நடத்தும் தேவன்

உபாகமம் 8:6

ஆகையால், உன் தேவனா கிய கர்த்தருடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படிக்கு, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக் கடவாய்.


இன்றைய நாட்களிலே, உலகத்திலே அனுமதிக்கப்பட்டிருக்கிற கொள்ளை நோய் கிருமியினால், ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையிலே தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றான். அது மட்டுமல்லாமல் பல மனிதர்க ளுடைய வாழ்க்கையிலே பல பின்னடைவுகள் கூட ஏற்பட்டிருக்கின்றது. இதனால் மனிதர்கள், தேவன் எங்கே என்று படைத்த தேவனையே நொந்து கொள்கின்றார்கள். நான் எங்கே இருக்கின்றேன் என்ற கேள் வியையே தற்போது ஒவ்வொரு மனி தனும் தன்னிடத்திலேதானே கேட்டுக் கொள்ள வேண்டும். தேவ னாகிய கர்த்தர்தாமே, தம்முடைய பிரமாணங்களின்படி தங்கள் வாழ் க்கையை அமைத்துக் கொள்கின் றவர்களுக்கு ஆசீர்வாதத்தையும், முடிவிலே நித்திய ஜீவனையும் வைத் திருக்கின்றார். ஆனால் தேவனாகிய கர்;த்தரின் பிரமாணங்களை தள்ளிவிட்டு, தங்களுக்கென வழிகளை தெரிந்து கொள்கின்றவர்களுக்கு முன்பாக சாபமும், அதன் முடிவாகிய நித்திய மரணமும் வைக்கப்பட்டி ருக்கின்றது. இன்று சாபத்தின் வழியை தெரிந்து கொள்கின்றவர்கள், தாங்கள் சென்றுகொண்டிருக்கும் தம் சொந்த வழிகளைவிட்டு மனந்திரு ம்பாமல், தங்கள் இருதயங்களை கடினப்படுத்திக் கொண்டு, இன்னு மாய் தேவனாகிய கர்த்தரை அசட்டை செய்து அவரை தங்கள் வாயி னாலே சபித்துக் கொள்கின்றார்கள். இதனால் அவர்கள் நித்திய மரண த்தின் விளிம்பிலே நிற்கின்றார்கள். தேவனாகிய கர்த்தரின் எச்சரிப்பை எவ்வளவு காலமாய் மனிதர்கள் அசட்டை செய்ய முடியும்? மனிதர்களு டைய அக்கிரமம் நிறைவேறும்போது, அழிவு சடுதியாய் உண்டாகும். பிரியமானவர்களே, இந்த நாட்களை நிதானித்து அறிந்து கொள்ளு ங்கள். உலக போக்கில் வாழ்பவர்கள் தங்கள் வாழ்க்கையை நிதானித்து அறியாமல், மாற்று வழிகளை தேடுகின்றார்கள். ஆனால் நாமோ, நம் முடைய வழிகளை நாம் ஆராய்ந்து பார்த்து, வேதனை உண்டாக்கும் வழிகள் நம்மிடத் திலிருக்குமாயின் நாம் அவைகளைவிட்டு மனந்தி ரும்ப வேண்டும். வருடத்தின் கடைசி நாளிலே வந்திருக்கும் நாம், நம் வாழ்க்கையை ஒருவிசை திரும்பிப் பார்த்து, கர்த்தருடைய வழிநடத்து தலுக்காக நன்றி செலுத்த வேண்டும். அடுத்த வருடம், இந்த உலகிலே என்ன நடக்கும் என்பது மனிதனுக்குத் தெரியாது, ஆனால் தேவனை நம்பியிருக்கின்ற மனுஷனோ அவன் எப்போதும் அவரோடேகூட ஆளுகை செய்வான்.

ஜெபம்:

இதுவரை நடத்தி வந்த தேவனே, என்னுடைய உயர்விலும், தாழ்விலும், சோதனையிலும், வேதனையிலும் என்னோடுகூட இருந்து, நீர் என்னை அதிசயமாய் நடத்தி வந்தீர், நன்றி தகப்பனே. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 103:1-22