புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 30, 2021)

யார் உங்கள் மாதிரி?

1 பேதுரு 2:21

நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.


இந்த உலகிலே சந்ததிக்கு சந்ததி, மனிதர்கள் நாகரீகமடைகின்றார்கள் என்று கூறப்படுகின்றது. காலத்திற்கு காலம், போக்குகள் (வசநனெ) மாற்ற மடைகின்றது. மனிதர்கள் புதுப் பாணியிலே நடை உடை பாவனை களை (Fashion) மாற்றிக் கொள்கின்றார்கள். இவைகளெல்லாம் எங்கே இருந்து உருவாக்கப் படுகின்றது? இதன் பின்ணனியில் இருப்பவர்கள் யார்? நவீனமயமான புதுப் பாணி உடை களை குறித்த எண்ணக் கருவை மனி தர்களின் மனதிலே திணிப்பதற்காக, உலகத்திலே பிரபல்யமான நட்சத்திர ங்களை மாதிரிகளாக (Models) பயன்ப டுத்தி, ஊடகங்கள், செய்திகள், விளம் பரங்கள் வாயிலாக அவைகளை சந் தைப் படுத்துகின்றார்கள். இவைக ளோடு கூட, நான் விரும்பிய வார்த் தைகளை விரும்பிய நேரம், விரும்பிய இடத்தில் பேச முடியும், நான் விரும்பிய உடைகளை, விரும்பிய இடங்களிலே, நான் விரும்பிய பிரகாரமாக உடுத்துக் கொள்ள முடியும், இது என்னுடைய வாழ்க்கை நான் விரும்பிய பிரகாரமாக வாழமுடியும் என்ற மனநிலையையும் (Attitude) சேர்த்து சந்தைப் படுத்துகின்றார்கள். அதிலே எந்த கருத்து வேறும்பாடும் இல்லை அதாவது நான் என்னு டைய வாழ்க்கையை நான் விரும்பிய பிரகாரமாக வாழ்வதற்கு தடை யேதும் இல்லை ஆனால் மனிதன் எதை விதைக்கின்றானோ அவன் முடிவிலே அதை அறுவடை செய்வான். நாம் இன்று பின்பற்றி செல் கின்ற மாதிரி (Model) யார்? நாம் ஆண்டவர் இயேசுவையே நம்முடைய மாதிரியாக முன் வைத்து அவருடை சாயலை அடையும்படியாக அவரு டைய வழியையே நாம் பின்பற்ற வேண்டும். அவர் வழியாக இரட் சிப்பை பெற்றுக் கொண்ட நாம், இந்த உலகத்திற்கு ஆண்டவர் இயே சுவையே பிரதிபலிக்கும் மாதிரிகளாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றோம். 'நம்மைக் காணுவோர் நம்மில் ஆண்டவர் இயேசுவின் சாயலைக் காண வேண்டும்.' நாம் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், நாம் சொல்லும் வார்த்தைகள், நாம் உடுத்தும் முறைகள், நம்முடைய நடைகள் அநேகரை ஆண்டவர் இயேசுவினிடத்திற்கு நடத்தலாம் அல்லது அவரைவிட்டு தூரமாகக் கொண்டு செல்லலாம். பிரியமானவர் களே, ஆண்டவர் இயேசுவின் திவ்விய குணாதிசயங்களை நாம் வெளிப்படுத்தும்படி அழைக்கப்பட்டிருக்கின்றோம். எனவே நம்முடைய வாழ்க்கையானது அவரைப் போலவே மாற்றமடைவதாக.

ஜெபம்:

பிதாவாகிய தேவனேஇ நான் உமக்கு பிரியமான பிள்ளையைப் போல உம்மை பின்பற்றுகின்றவனா(ளா)கி, சுகந்த வாசனையாக என்னை உமக்கு ஒப்புக் கொடுக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக் கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:1-2