புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 29, 2021)

அழைத்தவரை நோக்கி முன்னேறுங்கள்

எபிரெயர் 12:1

நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்


ஒரு குறிப்பிட்ட சாரதியொருவன், பொதிகளை ஏற்றிச் செல்லும் நீண்ட கனரக வாகனமொன்றை அதன் உரிமையாளரிடமிருந்து கடத்திக் கொண்டு, அதி வேக நெடுஞ்சாலை வழியாக, மிக வேகமாக சென்று கொண்டிருந் தான். அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி, சாரதியை கைது செய்யும் படிக்கு சுமார் இருபதிற்கு மேற்பட்ட பொலிஸ் வாகனங்களும், கெலிக் காப்டரும் அந்த கனரக வாகன த்தை கண்காணித்து தொடர்ந்து பல மணித்தியாலங்களாக பின் சென்று கொண்டிருந்தது. கடத் திச் செல்லப்பட்ட கனரக வாகன த்தை உடனடியாக நிறுத்தும்படி க்கு தேவையான ஆயுதங்களும் உபகரணங்களும் பொலிசாரிடம் இரு ந்த போதும்கூட, அவர்கள் பொது ஜனங்களின் பாதுகாப்பையும், நாட்டி ற்கு ஏற்படக்கூடிய சேதங்களையும், அந்த வாகன உரியமையாளருக்கு ஏற்படக்கூடிய நஷ;டத்தையும் தவிர்த்துக் கொள்ளும்படியாக, அந்த கனரக வாகனமானது, ஒரு பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்வரை, பொலிசார் பொறுமையோடும், சகலவித ஆயத்தத்தோடும் சென்று கொண் டிருந்தார்கள். குறித்த இடத்திற்கு வந்தபோது, அந்த வாகனத்தை இடை மறித்து, அதன் சாரதியை சேதமெதுவுமின்றி கைதுசெய்து கொண்டார் கள். கருப்பொருளாவது, அந்தச் சாரதியானவன், பட்டப்பகலிலே, பொல் லாப்பான காரியத்தை செய்தான். அவனை உடனடியாக வன்முறையி னால் கைப்பற்றக்கூடிய வல்லமையானது பொலிசாருக்கு இருந்த போதும் அவர்கள் பொதுமக்களின் நலன் கருதி தகுந்த வேளைக்காக காத்திரு ந்தார்கள். பிரியமானவர்களே, உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம். (1 யோவான் 5:19). பொல்லாங்கு செய்பவர்கள்; சபைகளிலே, விசுவாசிகள் என்ற போர்வையிலே, கோது மையின் நடுவிலே இருக்கும் களைகளைப் போல விதைக்கப்பட்டிருக் கின்றார்கள். (மத் 13:25). பொல்லாங்கு செய்கின்றவர்களை நாம் நம் முடைய மாம்ச பெலத்தினால் அகற்ற முற்படும் போது அதனாலே உண் டாகும் பின்விளைவுகள் இரட்சிப்பை பெற்ற தேவ பிள்ளைகளை பின் மாற்றமடையச் செய்யலாம். பொல்லாங்கு செய்கின்றவர் கள்; தாங்கள் அகன்று போகும் போதும் பொல்லாப்பு செய்கின்றவர் களாகவே இருப் பார்கள். நீங்கள் அவர்கள் கிரியைகளை ஆராய்ந்து பார்ப்பதிலும், அவ ர்களைக் குறித்து அதிகமாக பேசுவதிலும் உங்கள் நோக்கத்தை செலு த்தினால் உங்கள் மனக்கண்கள் குருடாக்கிவிடும். எனவே, தேவன் அவர் களுக்கு குறித்த காலம்வரும்வரைக்கும், விசுவாசத்தை தொடக்கிறவரும் முடிக்கின்றவருமான இயேசுவின்மேல் கண்களை பதிய வைத்து அவரை நோக்கி முன்னேறுங்கள்.

ஜெபம்:

இதுவரை காத்த தேவனே, கோணலும் மாறுபாடுமான சந்ததி யின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு என்னை வழிடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 1:17