புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 28, 2021)

எதற்காக ஒன்றுபடுகின்றோம்?

2 கொரிந்தியர் 10:4

எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.


ஒரு கிராமத்திலே வசித்து வந்த குடிமக்கள் ஒன்றுபட்டவர்களாய், தங் கள் வாழ்வாதாரத்திற்காக தாங்கள் செய்யும் பயிர்ச்செய்கைக்கு வேண் டிய தண்ணீர் வசதிகள் இல்லாதிருப்பதையும், அதனால் தங்களுக்கு ஏற் பட்டிருக்கும் சிரமங்களையும், நஷ;டங்களையும் குறித்து, கிராமத்தின் முத ல்வரிடம் முறையீடு செய்து, தங்களுக்கு உதவி செய்யும்படி குரல் கொடு த்தார்கள். அந்தக் கிரமத்தின் முதல் வரானவர், ஜனங்களின் தேவை யை உணர்ந்து, கிரமசபை உறுப் பினர்களோடு கலந்தாலோசித்து அவர்களுக்கு வேண்டிய சலுகை களைச் செய்து கொடுத்தார். இவ் வண்ணமாக, காலத்திற்கு காலம் மனிதர்கள் ஒன்றுபட்டு சில நன்மை யான காரியங்களுக்காக குரல் கொடுப்பதுண்டு. அவைகளிலே சில நன்மைகள் உண்டாகியிருக்கின்றது. ஆனால் இன்றைய உலகிலே, உரிமைக் குரலானது, நாகரீகமடைந்து, மனிதர்களோ தங்கள் ஆசை இச்சைளை நிறைவேற்றும்படிக்கு ஒன்றுபட்டு வருகின்றார்கள். இது என் னுடைய வாழ்வு, இது என்னுடைய விருப்பம், இது என்னுடைய உரிமை என்று தேவனுக்கு விரோதமான காரியங்களுக்கும் உரிமைக் குரல் கொடுகின்றார்கள். இந்த குரலின் எதிரொலியானது இப்போது சில ஆலயங்களிலும் கேட்கின்றது. கோராகு, தாத்தான், அபிராம் என்னும் மனிதர்கள் தேவனுடைய தாசனாகிய மோசேக்கு விரோதமாக கலகம் பண்ணி சபையோரை குழப்பிவிட்டது போல இன்றைய நாட்களிலும் சில ஜனங்கள் தாங்கள் நினைத்தபடி காரியங்கள் நடைபெறாதவிடத்து, தவறான நோக்கங்களுக்காக ஒன்றுபடுகின்றார்கள். தேவனாகிய கர்த்தர் தாமே, புருஷன், மனைவி, பிள்ளைகள், வாலிபர்கள், முதியோர்கள், விதவைகள், போதகர்கள், மூப்பர்கள், உதவி ஊழியர்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதைக் குறித்த வரையறையை வேதாகமத்திலே எழுதிக் கொடுத்திருக்கின்றார். மேற்கூறப்பட்டவர்களிலே தேவனுடைய வரைய றையை மீறி ஒருவன் அநியாயம் செய்யும்போது, அவன் அதற்குரிய பின்வி ளைவை கண்டடைவான். எனவே, நாம் மாம்சத்தின்படி ஒன்று பட்டு போராடங்களையும் கலகங்களையும் ஆரம்பிக்கத் தேவையி ல்லை. ஒருவன் கிறிஸ்துவின் வழியைவிட்டு மீறி உங்களுக்கு அநிய hயம் செய்து கொண்டால், நீங்களும் அவனைப் போல கிறிஸ்துவின் வழியை விட்டுவிடாமல், கிறிஸ்து உங்களுக்கு கற்றுக் கொடுத்த ஜீவ வார்த்தைகளின்படி நடவுங்கள். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு.

ஜெபம்:

எல்லாவற்றையும் அறிந்த தேவனே, நீர் நீடிய பொறுமையுள்ளவராக இருப்பது போல, நானும் உம்முடைய நேரத்திற்காக காத்திருக்கும் பொறுமையை எனக்கு தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 6:12