புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 27, 2021)

எதைவிட்டுவிடப் போகின்றாய்?

சங்கீதம் 86:5

ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.


ஆலயத்திலே உதவி ஊழியத்திலே ஈடுபட்டு வந்த மனிதனானவனொருவன் ஒரு குற்றமொன்றிலே அகப்பட்டுவிட்டான். ஆலயத்தின் போதகர் அந்த மனிதனை அணுகி, அவனிடமிருந்த பாவ பழக்கத்தைக் குறித்து அவனோடு பேசிய போது, அவன் தான் செய்துவரும் உதவி ஊழியத்திலிருந்து தன்னை விலக்கி கொள்கின்றேன் என்று போதகரிடம் கூறினான். அதற்கு போதகர் மகனே: அப்படியானால் அந்த பாவ பழக்க த்தை நீ என்ன செய்யப் போகின் றாய்? அதைவிட்டு விலகப் போகின்றாயா? அல்லது அதை தொடரப் போகின்றாயா? ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை வட்டத்திலும் அவன் ஏதோ ஒரு இடத்தில் தவறியிருப்பான். அதுபோலவே, நீயும் உன் வாழ்க்கையில் தவறிவிட்டாய். இது முடிவு அல்ல. உன் வாழ்க்கை ஒரு புத்தமாக இருந்தால், இந்த இந்த அத்தியாயத்திலே தவறு செய்துவிட்டாய். உன் தவறான பழகத்திலிருந்து நீ மனந்திரும்பி, அதை விட்டுவிடும் போது, அது உன் வாழ்க் கையிலே அழகான ஒரு புதிய அத்தியாத்திற்கு உன்னை நடத்தும். நீ உன் தவறான பழக்கத்தை விட்டுவிடாமல், அதைப் பற்றிக் கொண்டி ருப்பதற்காக, உன் வாழ்க் கையில் உனக்கு கிடைத்த மனந்திரும்பும் சந்தர்ப்பத்திலிருந்து விலகி ஓடுவாயானால், அது உன் கதையை ஒரு துன்பமான முடிவுக்கே கொண்டு செல்லும் என்று தயவாக அறிவுரை கூறினார். பிரியமானவர்களே, இன்று சில மனிதர்கள் சோதனையிலே அக ப்பட்டு, பாவம் செய்யும் போது, அதைக் குறித்து மனவருத்தமடைகின்றார்கள். ஆனாலும் அந்த வேளையிலே அதிலிருந்து விடுதலையடை யும்படிக்கு ரிய வழியைத் தேடாமல், அந்த வழியை முற்றிலும் அடை த்து விடுகின்றார்கள். எடுத்துக்காட்டாக, 'நான் இன்று பாவம் செய்து விட்டேன், எனவே இனி நான் வேதாகமத்தை வாசிக்க மாட்டேன், ஆண்டவர் இயே சுவிடம் ஜெபிக்க மாட்டேன், ஆலயத்திற்கு செல்வதையே விட்டுவிடப் போகின்றேன்' என்று சில மனிதர்கள் கூறிக் கொள்வது ண்டு. அவ ர்கள் தங்களது பாவத்திற்குரிய வழிகளை விட்டுவிடுவதற்கு ஆண்டவர் இயேசுவையே பற்றிக் கொள்ள வேண் டும். ஆனால் அவர்களோ ஆண்டவர் இயேசுவை விட்டுவிட்டு, தொடர்ந்து அந்த பாவத்தையே பற்றிக் கொள்கின்றார்கள். நெருக்கத்தின் நாளிலே, விடுதலை தரும் தெய்வம் இயேசுவைவிட்டு ஓடாமல் அவரையே அண்டிக் கொள்ளுங்கள். அவர் இரக்கத்தில் ஐசுவரியமுராயிருக்கின்றார்.

ஜெபம்:

தேவானாகிய கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை. நீர் என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டு எனக்கு விடுதலை தந்ததற்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 6:66-68