புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 26, 2021)

நித்திய பிதா

கொலோசெயர் 1:15

அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.


பொதுவாக, இந்த உலகிலே மனிதர்கள் தாம் அறிந்த அன்பிலே தாயின் அன்பே மேலானது என்பதையும் அதற்கீடான அன்பு உலகில் இல்லை யென்றும் மனிதர்கள் கூறிக் கொள்வார்கள். ஒரு நல்ல தகப்பனானவர், தன் பிள்ளைகளுடைய இன்பத்திலும் துன்பத்திலும் அவர்களோடிருந்து, தன் தோள்மீது அவர்களை சுமந்து செல்கின்றார். ஆனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நன்மையான ஈவுகளைக் கொடுக்க அறி ந்திருக்கின்றார்கள் என்ற கூற்றை இன் றைய உலகிலே சிலர் ஏற்றுக் கொள் ளுவதில்லை. ஏனெனில், என் தகப்ப னானவர் என்னைக் கைவிட்டார் என்றும் தாயானவள் தன் அன்பை எங் களுக்கு காண்பிக்கத் தவறிவிட்டாள் என்றும் சிலர் சொல்வதை நாம் கேட் டிருக்கின்றோம். இவை ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உண் டான காரியமாக இருக்கலாம். எவை எப்படியாக இருந்தாலும், இந்த உலகிலே மேன்மையாகக் கருதப்படும் அன்பு தணிந்து போனாலும், என்னுடைய அன்பு தணிந்து போவதில்லை என்று நம்முடைய பிதா வாகிய தேவன் கூறியிருக்கின்றார். பால் குடிக்கும் பாலகனை தாய் மற ந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்று அவர் வாக்குரைத்திருக் கின்றார். பிதாவாகிய தேவன்தாமே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக தம்மை நமக்கு வெளிப்படுத்தியிருக்கின்றார். ஆண்டவராகிய இயேசுதாமே, தம்முடைய திருப்பணியை நிறைவேற்றி பரலோகம் செல் வதற்கு முன்னதாக, தம்முடைய சீஷர்களை திபேரியா கடற்கரையோரமாக சந்தித்த வேளையிலே, அவர்களை நோக்கி: பிள்ளைகளே என்று அழைத்து, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்று அவர்களிடத்திலே கேட்டார். ஆண்டவராகிய இயேசு தாமே, நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று முன்னமே அவர்களுக்கு கூறியிருக்கின்றார். (யோவான் 10:30). அதாவது, பரம தந்தையின் திவ்விய குணாதிசயங்கள் யாவும், ஆண்டவர் இயேசுவிலே பரிபூரண மாக வெளிப்பட்டது. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ;டிக்கும் முந்தின பேறுமானவர். அவர் வழியாகவே நித்திய பிதா நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றார். ஒருவேளை, இந்த உலகத்தின் தந்தை தாய் நம்மை வெறுத்தாலும், நித்திய பிதாவின் அன்பு என்றும் மாறாததாயருக்கின்றது. அவர் நம்மை தாய்போல தேற்றி, தந்தையை போல தோளிலே சுமந்து செல்கின்றவராயிருக்கின்றார்.

ஜெபம்:

பிதாவாகிய தேவனே, உம்முடைய திருக்குமாரனாகிய இயேசு வழியாக உம்மை யார் என்பதை எமக்கு வெளிபடுத்தி வருவதற்காக நன்றி. உம்முடைய மாறாத அன்பிலே நிலைத்திருக்க கிருபை செய்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 17:21-22

Category Tags: