புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 25, 2021)

சமாதானக் காரணர்

லூக்கா 2:14

உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும்இ பூமி யிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண் டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.


நிம்மதி, மனஅமைதி, மனத்திருப்தி, மனநிறைவு, சமாதானம் என்ற வார் த்தைகளின் அர்த்தங்கள் தங்கள் வாழ்வில் உண்டாகும்படிக்கு மனிதர் கள் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு புதிதாக பிறந்த குழந்தை ஆரோ க்கியமாக இருக்க வேண்டும் என்பார்கள். பின்பு பாடசாலைக்கு செல் லும் நாட்கள் வந்ததும், நல்லதொரு பாடசாலையிலே சேர்ந்தாலே போதும் என்பார்கள். அதன்பின்பு அந் தப் பிள்ளை நன்றாக படித்தாலே போதும், படித்து முடித்ததும் நல்ல வேலை கிடைத்தாலே போதும், வேலை கிடைத்ததும், நல்ல ஒரு திரு மண பொருத்தம் வந்தால் போதும், அதன்பின்பு, அவர்களுக்கு ஒரு பிள்ளை கிடைத்தால் போதும் என்று இப்படியாக இந்த வாழ்க்கையின் விருப்பங்கள் தொடர்ந்து கொண்டே போகின்றது. இந்த வாழ்க்கை வட்டத்திலே மனிதனுக்கு எப்போது சமாதானம் உண்டாகும்? அந்தச் சமாதானம் எப்படி உண்டாகும்? அதை யார் கொடுப்பார்கள்? சற்று சிந்தித்துப் பாருங்கள். மெய்யான சமாதானத்தை இந்த உலகிலுள்ளவர் கள் யாரும் நமக்கு ஒருபோதும் கொடுக்க முடியாது. இந்த உலகிலே இல்லாததும், விலை கொடுத்து வாங்கமுடியாததுமானதை யாரால், எப்படி பெற்றுக் கொடுக்க முடியும்? பரலோகத்திற்குரியதை அதற்குரிய வர்களல்லாதவர்கள் எப்படி பெற்றுக் கொள்ள முடியும்? எனவே, நாம் அந்த சமாதானத்தை கண்டடையும்படிக்கு, நம்மில் அன்புகூர்ந்த பிதா வாகிய தேவன்தாமே, தம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவை இந்த உலகிற்கு அனுப்பினார். அனுப்பினார், என்று கூறும் போது, அவர் பர லோகத்திலே என்றென்றுமாய் இருக்கின்றவராய் இருந்தார். பிதா குறி த்த காலம் நிறைவேறிய போது, அவர் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இயேசு கிறிஸ்துவானவரோ, மனித குலத்தின் மேலிருந்த ஆக்கினையை நீக்கும்படிக்கு, அதற்குரிய பரிகா ரத்தை செலுத்தும்படிக்கு, தம்மை பலியாக ஒப்புக் கொடுத்தார். அத னால் நாம் பரலோகத்திற்குரியவைகளை பெற்றுக் கொள்ளும்படிக்கு, பூவுலகத்திலுள்ள நம்மை, பரலோகத்தோடு ஒப்புரவாக்கினார். அதனால் ஆண்டவராகிய இயேசு வழியாக மனிதர்கள் யாவருக்கும் சமாதான த்தை பெற்றும் கொள்ளும் வழி உண்டாயிற்று. நாளை அல்லது பின்பு என்றல்ல, இன்றே இப்போதே அவர் தரும் சமாதானத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

நிலையான சமாதானத்தைத் தரும் தேவனே, இந்த உலக போக்கில் போய், வாழ்வில் குழப்பங்களை ஏற்படுத்தாதபடிக்கு, உம்முடைய சமாதானம் என் இருதயத்தை இன்றே ஆளுமை செய்ய அருள்புரிவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 14:27