புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 24, 2021)

சர்வ வல்லமையுள்ள தேவன்

சங்கீதம் 2:11

பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.


இன்று நாடுகளுடைய வல்லமையானது எவைகளால் அளவிடப்படுகின் றது? ஒரு நாட்டின் பொருளாதாரம், இராணுவம், தொழில்நுட்பம், அர சியல் மற்றும் கலாச்சார வலிமை, இராஜதந்திர செல்வாக்கின் ஒருங் கிணைந்த வழிமுறைகளை மையமாக வைத்தே அந்த நாட்டின் வல்ல மையை அளவி டுகின்றார்கள். இவைகளிலே மேன்மையடைந்திருக்கும் நாடுகளை வல்லரசு என்று அழைக்கி ன்றார்கள். இந்த நிலையை அடைந்த நாடுகள், தேவனைக் குறித்த காரிய ங்களை தங்கள் கல்வி, சட்டதிட்டங் கள், ஆளுகைகளிலிருந்து அகற்றி விடுவதற்கு அல்லது அவைகளை தங் கள் ஆளுகைக்கு உட்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றார்கள். இது மனிதர்களுடைய அறியாமை யும், மதியீன முமாயிருக்கின்றது. இவ்வண்ணமாகவே, பாபிலோனின் பராக்கிரமமுள்ளவனாகிய நேபுகாத்நேச்சர் என்னும் மகாராஜா, தன் வல் லமையைக் குறித்து பெருமையடைந்ததால், அவன் மதிமயங்கிப் போனான். இதினிமித்தம் தேவன் குறித்த நாட்கள் நிறைவேறும்வரை க்கும் அவன் வெளியின் மிருகங்களோடு மிருகத்தைப் போல சஞ்ச ரித்து வந்தான். அந்த நாட்கள் சென்றபின்பு, அவன் தன் கண்களை வானத்துக்கு நேராக ஏறெடுத்தான். அவன் புத்தி அவனுக்கு திரும்பி வந்தது. அப்பொழுது அவன் உன்னத மானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினான். அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும். பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்த த்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்து கிறார், அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கி றீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றான். ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்? கர்த்த ருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமா கவும், பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோ சனைபண்ணி: அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள். பரலோகத்தில் வீற்றி ருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர் களை இகழுவார். அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்க ளோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார். ராஜ்யமும், வல்லமையும், மகிமை யும் என்றென்றைக்கும் தேவனாகிய கர்த்தருடையவைகளே.

ஜெபம்:

மகத்துவமுள்ள தேவனே, உம்முடைய ஆளுகை நித்தியமானது. நீர் சொல்ல ஆகும், நீர் கட்டளையிட நிற்கும் என்பதை நான் உணர்ந்தவனாக, உம்முடைய ஆளுகைக்குள் தரித்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 97:1-12