புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 23, 2021)

ஆலோசனைகளின் கர்த்தர்

எரேமியா 32:19

யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்;


இந்த உலகிலே நல் ஆலோசனைகளை கூறும் மனிதர்கள் அநேகர் இருக்கின்றார்கள். மாணவர்களின் நலனையே கருத்திற் கொண்ட ஆசிரி யர்கள், சரீர ஆரோக்கியத்தை பேண ஆலோசனைகள் கூறும் நல்ல மருத்துவர்கள, திட்டமிட்டு வாழ பொருளாரதாரத்தை குறித்த வழி முறைகளை கூறும் ஆலோசகர்கள், நாட்டின் சட்டதிட்டங்களை பற்றி எடுத்துரைக்கும் நீதியான சட்டத்தரணிகள் போன்றவர்களுடைய ஆலோசனைகள் யாவுமே தேவ னால் உண்டான ஈவுகள். எந்த ஒரு ஆலோசனையையும் நாம் நல்ல ஆலோசனை என்று கூறுவ தற்கு அவை தேவனுடைய வழிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். தேவனாகிய கர்த்தராலே சிருஷ;டிக்கப்பட்ட, மேன்மையான ஸ்தானத்திலே வைக்கப்பட்ட தேவ தூதனொருவன்: நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காச னத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று தன் இருதயத்திலே ஆலோசனை பண்ணிக் கொண்டான். அதுபோல கல்வி, சரீர ஆரோக்கியம், பொருளாதார செழிப்பு, நாட்டின் சட்டதிட்டங் களை பற்றிய ஆலோசனைனைகளைக் கூறும் சிலர், தேவனுடைய சிங்காசனத்திற்கு மேலாக தங்கள் ஆலோசனைகளை உயர்த்த எத்த னிக்கின்றார்கள். எடுத்துக்காட்டாக, தேவன் ஆதியிலே நியமித்த பரிசுத்த மெய்விவாகம் என்ன என்பதை பரிசுத்த வேதாகமம் தெளிவாகவே கூறுகின்றது. ஆனால் சில நாடுகளில்; உண்டான நீதியானது, தேவ நீதியை அவமாக்கும்படி முயற்சி செய்து ஆலோசனை கூறுகின்றது. கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனா யிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்? தமக்கு அறிவை உணர் த்தவும், தம்மை நியாய வழியிலே உபதேசிக்கவும், தமக்கு ஞானத் தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக் கவும், அவர் யாரோடே ஆலோசனைப ண்ணினார்? கர்த்தருடைய சிந் தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்த வன் யார்? தனக்குப் பதில் கிடைக்கும் படிக்கு முந்தி அவருக்கு ஒன் றைக் கொடுத்தவன் யார்? சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவ ருக்காகவும் இருக்கிறது. பிரியமானவர்களே, கர்த்தரே ஆலோசனையில் ஆச்சரியமானவர். தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமான எந்த ஆலோசனைக்கும் நீங்கள் செவி கொடுக்காதிருங்கள்.

ஜெபம்:

தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது. நீர் என்னை எப்போதும் உம்முடைய ஆலோசனைகளின் வழியிலே நடத்துவீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 11:33-36