புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 22, 2021)

ஆசீர்வதிக்கப்பட்டவன் யார்?

சங்கீதம் 128:1

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.


ஒரு கிராமத்திற்கு அருகிலுள்ள பட்டணத்தின் ஒதுக்குப் புறத்திலிருந்த, தையல் நிலையமொன்றிலே (ஆடை தயாரிப்பு நிலையம்), அந்த கிரா மத்திலிருக்கும் நூற்றுக் கணக்கானோர் வேலை பார்த்து வந்தார்கள். அந்த வேலையினால் வரும் ஊதியமே அவர்களின் வாழ்வாதாரமாக இருந்தது. ஒரு நாள், அந்த பட்டத்திணத்திலுள்ள பெயரும் புகழுமு டைய பெரும் ஐசுவரியமுள்ளவனொ ருவன், அந்தத் தையல் நிலையத்தின் முதலாளியை சந்தித்து, தையல் நிலை யம் இயங்கி வரும் நிலத்தை தனக்கு விற்று விடும்படியாகவும், அதன் பெறு மதிக்கு இரட்டிப்பான பணத்தை கொடு க்கின்றேன் என்றும் கூறினான். தையல் நிலைய முதலாளி அந்த ஐசுவரிய வானை நோக்கி: தையல் நிலையத் தையும், அதை சுற்றியுள்ள நிலத்தையும் நீங்கள் என்ன செய்யப் போகி ன்றீர்கள் என்று கேட்டான். அதற்கு அந்தப் பெரியவர்: இதை இடித்து விட்டு ஒரு பூங்காவுடனான உல்லாசமான தங்குமிடத்தை நான் எனக் காக அமைக்கப் போகின்றேன் என்று கூறினார். தையல் நிலைய முத லாளியோ: ஐயா பெரியவரே, நான் தேவனுக்கு பயந்து அவருடைய வழி களிலே வாழும் மனிதன். இந்த தையல் நிலையத்தை நம்பி வாழும் குடும்பங்கள் ஏராளம். நீங்கள் இந்த நிலத்திற்கு அதிக விலையை கொடுக்க முன்வந்ததற்கு நன்றி ஆனால், என்னை நம்பி என்னோடிருக் கும் இந்த உழைப்பாளிகளை, என் சுயநலனுக்காக நான் கைவிட மாட் டேன் என்று தாழ்மையுடன் கூறினான். பிரியமானவர்களே, அந்த ஐசுவ ரியான் அந்த முதலாளிக்கு இரட்டிப்பாக கொடுக்க வந்த பணம் அந்த முதலாளிக்கு ஆசீர்வாதமா? அல்லது அந்த கிராமத்திலுள்ள எளிமை யானவர்களின் வாழ்வாதாரத்தை காத்துக் கொள்ள வேண்டும் என்று தேவன் அந்த முதலாளிக்கு கொடுத்த மனம் ஆசீர்வாதமா? எதினாலே அந்த தையல் நிலைய முதலாளி தன்னை நீதிமான் என்று காண்பிக்கி ன்றான்? கல்வியும், பெயரும், புகழும், செல்வமும் ஒரு மனிதனை நீதி மானாக்குவதில்லை. கர்த்தருக்கு பயந்து அவர் வழியிலே நடக்கின்ற வனே நீதிமானாயிருக்கின்றான். தியாகத்தின் உருவாக தன்னையே நமக்காக கொடுக்க வந்த ஆண்டவர் இயேசுவை கண் முன்னே வைத் துக் கொள்ளுங்கள். கிறிஸ்துவுக்காய் இந்த உலகத்திலே எதை நீங்கள் இழந்து போனாலும், நீங்கள் நஷ;டமடைவதில்லை. பரலோகத்திலே உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.

ஜெபம்:

என்மீது அன்புகூர்ந்த தேவனே, நான் வாழ்வடையும்படி தன் உயிரையே தியாகம் செய்த உம்முடைய திருக் குமாரனாகிய இயேசுவைப் போல, நானும் தியாகத்துடன் சேவை செய்ய கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 கொரி 8:12-15