புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 21, 2021)

நீதிமான் நித்திய கருணையுள்ளவன்

சங்கீதம் 112:9

வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த வியாபார முகவரொருவரின் வியாபாரம் பெரிதாக விருத்தியடைந்ததால், மிகையான செல்வத்தை அவர் அடைந்து கொண்டார். தனக்குண்டான ஐசுவரியத்தைப் பற்றி பேசும் போது 'கர்த்தர் என்னை ஆசீர்வதித்திருக்கின்றார்' என்று தேவனுடைய நாமத்தை கூறிக் கொள்வார். பார்த்து வியக்கத்தக்க மாளிகை அவரு க்கிருந்தது, அவர் வீட்டிலே விருந் துகளுக்கு ஓய்வில்லை. உல்லாசப் பயணங்களுக்கும் முடிவில்லை. ஆனால் அவர் வாழ்ந்த ஊரிலேயே, அவர் கண்களுக்கு முன்பாக வாழ் ந்து வரும் ஏழை எளியவர்கள் படும் கஷ;டங்களை கண்ணாரக் கண்டும், காணாவதன் போல அவர் வாழ்ந்து வந்தார். இந்த மனிதனான வன், மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிரு பையும், சத்தியமுமுள்ள தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குகி ன்றவனாக வாழ்ந்து வந்தான். கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவன் யார்? அவன் நீதிமான் என்று பெயர் பெறுவான். அவன் நித்தம் இரங்கிக் கடன்கொடுக்கின்றான். அவன் கருணையுள்ளவனாக இருப்பதினால், தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்;. நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான். அவன் வாரியிறைக்கின்றான், ஏழை களுக்குக் கொடுக்கின்றான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற் கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும். பிரியமான வர்களே, இந்த உலகிலே பலர் கர்த்தருடைய நாமத்தை கூறிக் கொள்கின்றா ர்கள். ஆனால் ஒருவன், கர்த்தருடைய நாமத்தைக் கூறி, அவருடை யவன் என்பானாகில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுபாவங்கள் அவனிலே பிரதிபலிக்க வேண்டும். அவனே கர்த்தரால் அறியப்பட்ட வனாக இருப்பான். ஒருவன் கர்த்தாவே, கர்த்தாவே என்று கூறியும், கர்த்தராகிய இயேசுவின் ஆளுகையை காண்பிக்கும் கனிகள் அவன் வாழ்வில் இல்லாதிருக்குமாயின் அவன் அக்கிரம செய்கைக்காரன் எனப்படுவான் (மத்தேயு 25:34-46). ஆண்டவராகிய இயேசு, மீட்பராக இந்த உலகத்திற்கு வந்த நாளை நினைவுகூரும் இந்த மாதத்திலே, தாராள மனதுடன் ஏழைகளுக்கு கொடுங்கள். மிகையாய் உள்ளத்தில் மட்டுமல்ல, உங்களிடம் உள்ளதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கர்த்தருடைய கருணையை உங்களில் காண்பியுங்கள்.

ஜெபம்:

என் பிதாவாகிய தேவனே, உம்முடைய நாமத்தை அறிக்கையிடுகின்ற நான், உம்மைப் போல இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவனா(ளா)க வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 6:46