புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 20, 2021)

அந்நிய காரியங்கள்

2 கொரிந்தியர் 6:14

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக


சமஸ்த இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோனைப் போல ராஜா அநேகம் ராஜ்யங்களுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை. அவன் தேவ னாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான். தேவன் அவனை இஸ்ரவேல னைத்தின்மேலும் ராஜாவாக வைத்தார்;. தேவன் சாலொமோனுக்கு மிகு தியான ஞானத்தையும் புத்தியை யும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார். சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞான த்தையும் எகிப்தியரின் சகல ஞான த்தையும் பார்க்கிலும் சாலொமோ னின் ஞானம் சிறந்ததாயிருந்தது. அவன் மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது. அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயி ரத்து ஐந்து. மரங்கள், தாவரங்கள், பூண்டுகள் மிருகங்கள், பறவைகள் ஊரும்பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக்குறித்தும் வாக்கியங் களைச் சொன்னான். சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள் விப்பட்ட பூமியின் சகல ராஜாக்களிடத்திலுமிருந்து நானாஜாதியான ஜன ங்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள். ஆனா லும் அவன் தேவன் கொடுத்த கட்டளையை மீறி, தேவனை அறியாத அநேக ஸ்திரீகளை தனக்கு மனைவிகளாக்கிக் கொண்டான். அந்த அந் நிய ஸ்திரிகளோ அவனைப் பாவம் செய்யப் பண்ணினார்கள். எவ்வளவு ஞானமும் செல்வமும் புகழும் இருந்தாலும், தேவனுடைய கட்டளை களை மீறுகின்றவர்களினதும், அவருடைய பிரமாணங்களை அற்பமாக எண்ணுகின்றவர்களினதும் வாழ்க்கையை பாவமானது மேற்கொள்ளும். நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கிய மேது? கிறிஸ்துவுக்கும் பொல்லாப்பு செய்கின்றவர்களுக்கும் இசை வேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? ஒருவன் தேவனு டைய கட்டளையை மீறி அந்நிய காரியங்களோடு ஐக்கியப்படும் போது, அந்த அந்நிய காரியங்கள் அவன் கட்டுப்பாட்டிற்கு மீறி, அவனை ஆளுகை செய்யும். எனவே உங்கள் நண்பர்கள் யார்? நீங்கள் எந்த உறவுகளோடு ஐக்கியமாக இருக்கின்றீர்கள் என்பதைக் குறித்து மிக வும் எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள். கிறிஸ்துவோடு ஐக்கியமில் லாத எந்த உறவும் கிறிஸ்துவுக்குரியதல்ல. அவை இந்த உலகத்திற் குரியவைகளே. எனவே அந்த ஐக்கியங்கள் யாவும் உலக போக்கிற்கு உங் களை வழிநடத்தும். அவைகளை விட்டு விலகியிருங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனை அடைடையும் வழியை கற்றுக் கொடுக்கும் தேவனே, உம்முடைய பிரமாணங்களை நான் அற்பமாய் எண்ணி அவைகளை கைக்கொள்ளாமல் தள்ளிவிடாதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 இராஜா 11:1-10