புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 19, 2021)

வாழ்வு தரும் திருவசனம்

மத்தேயு 4:4

மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.


சில நாடுகளிலே கிறிஸ்தவர்களை சிறைப்படுத்தி, கடுமையாக துன்புறு த்தப்பட்ட சம்வங்களை நாம் சாட்சிகள் வாயிலாக கேட்டிருகின்றோம். சில சந்தர்ப்பங்களிலே, அவர்களை துன்புறுத்துகின்றவர்கள், அவர்களு டைய பிள்ளைகளுக்குரிய ஆகாரத்தை கொடுக்காமல், பிள்ளைகளை பட்டினியாக்கி விடுவார்கள். பெற்றோர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ் துவை மறுதலித்தால் மட்டுமே, அவர் களுடைய பிள்ளைகளுக்கு ஆகாரம் கொடுக்கப் படும் என்று அச்சுறுத்து வார்கள். அந்த சந்தர்பங்களிலும், சில பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு, இந்த உலகிலே ஆண்டவர் இயேசு இல்லாமல் ஒரு கணம்கூட வாழ்வதை விட, அவரோடு என்றென்றைக்கும் வாழும்படிக்கு, மரிப்பது மேலானாது என்ற உண்மையைக் குறித்து எடுத் துரைத்தார்கள். துன்பங்கள், உபத்திரவங்கள், பசி, பட்டினி, நிர்வாணம் மத்தியிலும், தங்களுக்கென தகுந்த வீடில்லாத வேளைகளிலும் ஆண்ட வர் இயேசுவைக் குறித்த விசுவாசத்திலே உறுதியாய் நிலைத்திருந்தார் கள். ஆனால் இந்த நாட்களிலே, வசதிகள் நிறைந்த நாடுகளிலே, இப் படிப்பட்ட அச்சுறுத்தல்கள் நவீனமயமடைந்திருப்பதால், கிறிஸ்துவை அறிந்த சிலரும் வஞ்சிக்கப்பட்டுப் போய்விடுகின்றார்கள். அது எப்படி யெனில், செல்வச் செழிப்பானது தேவனுடைய ஆசீர்வாதம் என்று எண் ணிக் கொண்டு, தாங்கள் செய்யும் வேலையே தங்களுக்கு ஆகாரம் கொடுக்கின்றது. தங்க வீடு கொடுக்கின்றது, உடுக்க உடை கொடுக்கி ன்றது என்ற மனநிலையுடையவர்களாக அவர்கள் மாறிவிடுகின்றார்கள். எனவே செய்யும் வேலையை காத்துக் கொள்ளும்படிக்கு எதையும் செய் வோம். எங்களுடைய வாழ்க்கையை மாற்றியமைப்போம். ஜெபத்தையும் வேத வாசிப்பையும், சபை கூடிவருதலையும் இரண்டாவது இடத்திற்கு தள்ளி விடுவோம். தேவன் கொடுத்த உதவி ஊழியங்களை விட்டுவிடு வோம் என்று தங்களை அறியாமலே தங்களை இந்த உலகத்தின் போக்கிற்கு ஒப்புக் கொடுக்கின்றார்கள். செய்யும் தொழில் இவர்கள் கட்டுப்பாட்டிற்கு மீறி விடுகின்றது. அதனால் இவர்கள் வாழ்வை இவர் கள் தொழில் மேற்கொண்டுவிடுகின்றது. பிரியமானவர்களே, நாம் செய் யும் தொழிலை செம்மையாக செய்ய வேண்டும் ஆனால் நம்முடைய பரம பிதாவே நம்மைப் பிழைப்பூட்டுகின்றார். அஞ்ஞானிகளைப் போல இந்த உலகம் உங்களை மேற்கொள்ள இடங் கொடுக்காதிருங்கள். தேவனை நம்பி அவருடைய வார்த்தையிலே நிலைத்திருங்கள்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவாகிய தேவனே, மனிதனானவனோ தன் வழிகள் செம்மையானவைகள் என்று நினைக்கின்றான். நானும் அவ்வழியே சென்று அழிந்து போகாதபடிக்கு உம்மிலே நிலைத்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்; 145:15-16