புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 18, 2021)

தேவனுடைய ராஜ்யத்தை அறிந்தவர்கள் யார்?

மத்தேயு 11:25

இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.


ஒரு மனிதனானவன், தன் சிறு பிராயத்திலிருந்து தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான். எளிமை யான அவனது குடும்பத்திலே, தேவன்மேல் நம்பிக்கையுள்ள அவனது பெற்றோர், தங்கள் பிள்ளைகள் முன்னேற்றமடைய வேண்டுமென்ற மன தின் ஏக்கத்துடன் நாள்தோறும் கடுமையாக உழைத்து வந்தார்கள். பிள் ளைகள் கல்வி கற்ற வேண்டும் என்று ஊக்கமளித்து, தங்களால் முடிந்த உதவிகளை பிள்ளைகளுக்கு செய்து கொடுத்தார்கள். தங்கள் நாளாந்த வாழ்விலே எல்லாவற் றிலும் ஆண்டவர் இயேசுவை முன்னாக வைத்து, விசுவாசத் தோடு, தங்களுக்கிருந்த பெல த்தோடு பிள்ளைகளை வளர்த்து வந்தார்கள். ஆண்டவர் இயேசு வோ அவர்களை அவர்கள் அறி யாததும் எட்டாததுமான அதிசயமானதும் ஆச்சரியமானதுமான வழிக ளிலே நடத்தி வந்தார். பிள்ளைகள் கல்வியறிவிலே பெருகினார்கள், படிப்படியாக வாழ்விலே முன்னேற்றங்கள் உண்டாயிற்று. பெற்றோ ரோடு வாழ்ந்து வந்த சிறு பிரயாத்திலே, நிபந்தனை ஏதுமின்றி, மறு கேள்வி இல்லாமல், ஆண்டவர் இயேசுவின் வார்த்தையை நம்பி வாழ் ந்து வந்த அந்த மனிதனாவன், கல்வி அறிவு பெருகிய போது, அவன் தன் சுய நம்பிக்கையிலே பெருக ஆரம்பித்தான். தனக்கிருக்கும் கல் வியறிவு உலகத்திலே எந்தப் பாகத்திலும் வாழ்வாதாரத்திற்கு உதவும் என்ற எண்ணமுடையவனானான். அதுமட்டுமல்லாமல், ஆண்டுகள் கட ந்து சென்ற போது, ஆண்டவர் இயேசுவினுடைய வார்த்தைகளை தியா னிக்கும் போது தன் கல்வியறிவினால், அவைகளை நியாயமானவை களா? யுதார்த்தமானவைகளா? நாகரீகமான உலகத்திற்கு ஏற்புடையவை களா என்று சிந்திக்க ஆரம்பித்தான். ஆம், இந்த மனிதனானவனுடைய வாழ்க்கையில் அவன் கல்வியறிவு கட்டுபாட்ற்கு மீறி, அவனை கட்டு ப்படுத்துவதற்கு அவன் இடம் கொடுத்தான். பிரியமானவர்களே, கல் வியறிவினால், இந்த உலகிலே மனிதனுக்கு சில பிரயோஜனங்கள் உண் டாயிருக்கின்றது. ஆனால், தேவனை அறியும் அறிவானது, இந்த உலக கல்வியறிவுக்கு கட்டுப்பட்டதல்ல. தேவனுடைய ராஜ்யத்தின் மேன் மையை, காணும்படிக்கு இந்த உலகத்திலே அறிவற்றவர்கள் என்று கருதப்படுகின்றவர்களுடைய மனக் கண்களை தேவனுடைய வார்த்தை யானது பிரகாசிப்பித்தது. எனவே உலக அறிவு உங்கள் வாழ்;க்கையை கட்டுப்படுத்தாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாயிருங்கள்.

ஜெபம்:

பிதாவே, வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே, இந்த உலகத்தி னால் உண்டான கல்வியறிவானது என் வாழ்க்கையில் என் கட்டுபாட்டி ற்கு மீறி செல்லாதபடிக்கு, உம் வார்த்தைக்கு நான் கட்டுப்பட்டிருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிரசங்கி 3:11