புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 16, 2021)

தேவனுடைய கட்டுப்பாடிற்குள் வாழ்பவர்கள்

ரோமர் 8:14

மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறா ர்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.


புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள ஒரு மனிதனானவன், சிகரெட்டின் அடிக் கட்டையை, தெருவோரமாக இருந்த குப்பைகூளங்களின் அருகே போட் டுவிட்டு சென்றான். சற்று நேரம் கழிந்ததும், அந்த குப்பைகூலங் களிலிருந்து புகை எழும்;ப ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குள் அது நெருப்பாக பற்றியெரிந்து அரு கிலிருந்த காட்டுப் பகுதிக்குள் பரவி, கட்டுப்பாட்டிற்கு மீறிய காட்டுத் தீயாகப் பற்றியெரிந்து கொண்டிருந்தது. பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது. மனிதர்களுடைய வாழ்விலும், சிறிதாக ஆரம்பிக்கும் செயல்கள், உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராவி டின், அவைகள காலப்போக்கில் அவனுடைய கட்டுப்பாட்டிற்கு மீறிச் சென்றுவிடும். இப்படியாக மனிதர்களுடைய வாழ்விலே கட்டுப்பாட் டிற்கு மீறிச் செல்லும் பல காரியங்கள் உண்டு. அவைகளில் சிலவற்றை குறித்து, வேத வசனத்தின் வெளிச்சத்திலே இந்த நாட்களிலே தியானம் செய்வோம். நம்முடைய வாழ்க்கையிலே ஏதோ ஒரு காரியம் நம்மு டைய கட்டுப்பாட்டிற்கு மீறி சென்றுவிட்டது என்பதன் பொருள் என்ன? அதாவது, நாம் அடக்கி ஆளுகை செய்ய வேண்டிய காரியமொன்று நம்மை அடக்கி ஆளுகை செய்யும் போது அந்தக் காரியம் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்காது. ஒரு குதிரையை வாங்கிய மனிதனான வன், அதில் சவாரி செய்யும் பொருட்டு அதன் மேல் ஏறி உட்கார்ந்தான். ஆனால் அந்த குதிரையோ கட்டுக்கு அடங்காமல், அங்குமிங்கு மாய் துள்ளிக் குதித்து ஓட ஆரம்பித்தது. அந்தக் குதிரையானது அந்த மனிதன் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாமல், தான் விரும்பிய இடத்திற்கு அந்த மனிதனை கொண்டு சென்றது. அதனால், நாம் குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவா ளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகி றோம். வழிநடத் தும் ஆவியானவர், தேவ பிள்ளைகளாகிய நமக்குள்ளே வாசம் செய்கின்றார். பிதாவாகிய தேவன்தாமே, தூய ஆவியா னவரை எதற்காக நமக்கு ஈவாக கொடுத்திருக்கின்றார்? நம்மோடு என் றென்றைக்கும் இருந்து, நமக்கு கற்றுக் கொடுத்து, சகல விதமான தேவனுடைய உண்மையான வழியிலே நம்மை நடத்தும்படிக்காக அவரை நமக்கு கொடுத்திருக்கிறார். எனவே அவர் காட்டும் வழியிலே நடப்போமாக.

ஜெபம்:

அப்பா பிதாவே என்று கூப்பிடும் புத்திர சுவிகாரத்தின் ஆவியை தந்த தேவனே, உமக்கு பிரியமான தேவ பிள்ளைகளாக நீர் காட்டும் வழியிலே செல்லும்படிக்கு நீர் என்னை கரம்பிடித்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதி 16:32