புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 15, 2021)

நினைவுகளை ஆராய்ந்து, நிதானிங்கள்

1 கொரிந்தியர் 2:15

ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்;


தேவனாகிய கர்த்தர் தாமே, நம்முடைய நினைவுகள் என்ன என்பதை அறி ந்தும், அவைகள் பரலோகத்திற்குரியவைகளா அல்லது இந்த பூலோகத் திற்குரியவைகளா என்பதையும் அறிந்திருக்கின்றார். மனிதனுடைய ஒவ் வொரு சிந்தையும், ஒன்றில் அவன் ஆவிக்குரிய வாழ்வை உருவாக்கும் அல்லது உடைக்கும் என்பதை நாம் திட்டமாக அறிந்து கொள்ள வேண் டும். என்னுடைய நினைவுகள் என் வாழ்வை பரிசுத்தத்திற்கும் வழிநட த்தாது என்றும், அதே நேரத்திலே பாவத்திற்கும் வழிநடத்தமாட்டாதென்றும், அது நடுநிலையானது என் றும் ஒருவரும் கூறிக் கொள்ள முடியாது தேவனுக்குரிய நினைவுகளோ எமக்கு உன்னத வாழ்வை உருவா க்கும் ஆனால் இந்த உலகத்தினால் உண்டான நினைவுகளானது நம் வாழ்வை உடைத்துப் போடும். மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். எனவே ஆவிக்குரிய வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கு, நாம் நம்முடைய சிந்தையிலே தோன்றும் நினைவுகள் தேவனால் உண்டானவைகளா அல் லது உலகத்தினால் உண்டானவைகளா என நிதானித்து அறிந்து கொள்ள வேண்டும். ஒரு வாலிபனுடைய மனதிலே வாலிபத்திற்குரிய தவ றான நினைவுகள் உண்டாகும் போது, இந்த உலகத்திற்குரியவர்கள், அது உன் நினைவுகள் மட்டுமே, கற்பனா உலகிலே நீ வாழ்வதில் தவ றில்லை என்று கூறிக் கொள்வார்கள். ஆனால் அந்த வாலி பனானவன், தேவனுடைய வழியிலே நடந்து கொள்ள விருப்பினால், தன் உள்ளத் திலே சில கேள்விகளை கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த நினைவை நான் என் பெற்றோரோடு பகிர்ந்து கொள்வது யோக்கியமாக இருக்குமா? இந்த நினைவுகளை என் சகோதர சகோதரிகளோடு பேசிக் கொள்ள முடியுமா? இவை தேவனுடைய வார்த்தையின்படி என்னை பரிசுத்தத்தி ற்குள் நடத்துமா? என்பதை தேவ வார்த்தையின் வெளிச்சத்தில் அவன் சிந்தித்துப் பார்த்து அவை யோக்கிமற்றதாக இருந்தால் அந்த நினை வுகளை விட்டுவிட வேண்டும். இப்படியாக மனிதனுடைய மனதிலே தோன்றும் விபசாரம், பொருளாசை, பிரிவினைக்குரிய நினைவுகளை, அவன் மேற்கூறிய கேள்விகளை தன் மனதிலே கேட்டு, தேவனுக்கு எதிரான எல்லா மனித எண்ணங்களையும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஜெயங் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

என்னுடைய சிந்தையை முன்னறிந்த தேவனே, மறைவானதும் துணிகரமானதுமான கேட்டின் நினைவுகளை நான் மனதிலே வைத்திருக்காதபடிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 4:13