புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 14, 2021)

நான் சென்றடைய வேண்டிய இடம்

யோவான் 14:3

நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.


வடக்குத் திசையிலே இருக்கும் ஒரு பட்டணத்திற்கு போகும்படிக்கு, அங்கு செல்லும் பஸ் வண்டி வரும்வரைக்கும் ஒரு வியாபாரியானவன் பஸ் தரிப்பு நிலையத்திலே காத்திருந்தான். அவ் வழியாக ஒரு பஸ் வண்டி வந்தபோது, தான் வைத்திருந்த சிறிய பொதிகளோடு, பஸ் வண்டிக்குள் ஏறிக் கொண்டான். பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளும் போது, அந்த வண்டியானது அவன் சென்றடையும் ஊருக்குச் செல் லாது என அறிந்து கொண்ட போது, தன் பொதிகளோடு சீக்கிர மாய் அந்த பஸ் வண்டியைவிட்டு இறங்கி, தான் செல்லும் ஊருக்கு போகும் பஸ் வண்டி வரும்வரை க்கும் பஸ் தரிப்பு நிலையத்திலே களைப்போடு காத்திருந்தான். நாம் நம்முடைய சிந்தையை காத் துக் கொள்ளும்படிக்கு, நம் மன திலே சிந்தனைகள் தோன்றும் போது, இந்த சிந்தனையானது நம்மை எங்கே கொண்டு செல்லும்? அதன் முடிவு என்னவாக இருக்கும்? நாம் செய்து முடிக்க வேண்டிய காரியத்தை நிறைவேற்றுவதற்கு இந்த சிந் தனை நமக்கு உதவி செய்யுமா? நாம் சென்றடைய வேண்டிய இடத் திற்கு இந்த சிந்தனையானது என்னை கொண்டு செல்லுமா? என்ற கேள் விகளை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு மனி தனானவன், எந்த குற்றமும் செய்யாதிருக்கும் போது, அவனுடைய அய லவனொருவன், அவன்மேல் குற்றத்தை சுமத்தினான். அதனால் அந்த மனிதனானவன் மிகவும் கோபமடைந்தான். அன்று இரவு முழுவதும், தன்மேல் குற்றம் சுமத்திய அயலவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண் டும் என்னும் சிந்தனையே அவன் மனதிலே ஓடிக் கொண்டிருந்தது. காலையிலே எழுந்திருந்த போது, அந்த சிந்தனையின்படி நான் நடந்து கொண்டால் அதன் முடிவு என்னவாக இருக்கும் என்று தியானம் செய் தான். நான் தேவனுடைய பிள்ளையல்லவோ, என்னுடைய கோபம் என் சுயநீதியையே நிறைவேற்றும் ஆனால் அது தேவனுடைய நீதியை நட ப்பிக்க மாட்டாதே. என்னுடைய ஆண்டவராகிய இயேசு இருக்கும் இடத் திற்கு சென்றடையும்படியல்லவோ நான் ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கி ன்றேன். எனவே பிதாவாகிய தேவனுடைய சித்தம் என் வாழ்வில் நிறை வேறும்படி பொறுமையினால் என் ஆத்துமாவை காத்துக் கொள்வேன் என்று தீர்மானம் செய்து கொண்டான். இப்படியாக நம்முடைய வாழ் விலே தோன்றும் சிந்தனைகளை தேவ ஆவியானவரின் துணையோடு நிதானித்தறிந்து அவைகளை ஜெயம் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

எனக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணியிருக்கின்ற தேவனே, அந்த ஆயத்தத்தை தடை செய்யும் எந்த சிந்தனையின்படியும் நான் நடவாமல், பரலோகத்தை குறித்த தியானத்தோடு பொறுமையாக வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 10:4-5