புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 13, 2021)

பாவிகளுக்கு புகலிடமானவர்

சங்கீதம் 146:5

தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.


மனிதனானவன் சிந்தித்து செயலாற்றும் மன ஆற்றலுடையவன். எவருமே காணமுடியாதபடிக்கு மனிதனுடைய மனதிலே மறைந்திருக்கும் யோச னைகள் யாவும், அதன் காலத்திலே மனிதர்கள் யாவரும் காணக்கூடிய வெளியரங்கமான கிரியைகளை உண்டு பண்ணும். அவன் தன் யோச னைகளால் தனக்கு ஆக்கபூர்வமான பலன்களையும் அல்லது அழிவுக் கேதுவான விளைவுகளையும் கூட உண்டாக்கிக் கொள்கின்றான். வேலி யடைக்கப்படாமலும், பராமரிக்கப்ப டாமலும் இருக்கும் தோட்டத்திலே களைகள் தானாகவே முளைத்தெ ழும்புவது போல, நாம் நம்முடைய சிந்தையை காத்துக் கொள்ளாவிடின், அங்கே பலவிதமான யோசனை கள் பல வழிகளினாலே விதைக்கப்படுகின்றது. யோசனைகள் அல்லது சிந்தனைகள் எவ்வழியாக மனிதனுடைய மனதிலே உண்டாகின்றது? இன்று இந்தத் தியானத்தை கேட்பதற்கும் அல்லது வாசிப்பதற்கும் தீர்மானம் செய்தபடியால் நீங்களே இந்தத் தியானத்தை உங்கள் சிந்தைக்குள் நீங்களே அனுமதித்திருக்கின்றீர்கள். அவ்வண்ணமாகவே, பார்க்கும் காட்சி வழியாகவும், வாசிக்கும் கட்டுரைகள் வழியாகவும், கேட்கும் கதைகள் செய்திகள் வழியாகவும், சுயமாக உண்டாகும் கற் பனை கனவு கள் வழியாகவும் பல சம்பவங்கள் ஒரு மனிதனுடைய சிந்தைக்குள் செல்கின்றது. எனவே தன்னுடைய வாழ்க்கையிலே நன் மையான பலன்களை காண விரும்பும் ஒரு மனிதனானவன் எதை தான் பார்கின்றான், வாசிக்கின்றான், கேட்கின்றான், கற்பனை செய்கி ன்றான் என்பதைக் குறித்து அவன் மிகவும் எச்சரிக்கையுள்ளவனாக இருக்கின்றான். இன்று பரவலாக மனிதனுடைய எண்ணங்களும் ஏக்க ங்களும் திரைப்படங்கள், நாடகங்கள், விளம்பரங்கள், காட்சிகள், பாட ல்கள, பேச்சுக்கள, வலைத் தளங்கள், புத்தகங்கள், செய்திகள் வாயி லாகவும் வெளிவிடப்படுகின்றது. பிரியமானவர்களே, பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனு டைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நா ளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம். யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம் பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. எனவே மனதிலே தோன்றுகின்ற யோசனைகளை எப்படி ஆராய்ந்து பார்த்து அவற்றுள் தேவனுடையவைகளையே நாம் இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து, இந்நாட்களிலே அதிக மாக தியானிப்போம

ஜெபம்:

என்னை ஆட்கொண்ட தேவனே, என் மனதில் தோன்றும் யோசனைகளை உம்முடைய வார்த்தையின்படி வகையறுத்து, நீர் காட்டிய வழியிலே நான் முன்னேறிச் செல்ல கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:1-3