புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 12, 2021)

சிந்தையை காத்துக் கொள்ளுங்கள்

சங்கீதம் 73:28

எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்;


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனானவனொருவன், பல சவால்கள், பாடுகள் மத்தியிலும், தேவனுக்கு பயந்து அவர் வழியிலே நடக்கின்ற உத்தமனாக இருந்து வந்தான். அதே ஊரிலே பொருமையுள்ளவனும், வீம்புகாரனுமாகிய பொல்லாத மனிதனொருவன், அவன் விரும்புவதி லும் அதிகமான சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து வந்தான். இதைக் கண்டு கொண்ட உத்தமமான வாழ் க்கை வாழும் மனிதனாவன், அந்த பொல்லாத வழிகளிலே வாழும் மனி தன் மேல் மிகவும் எரிச்சல் அடைந் தான். நான் எத்தனை ஆண்டுகளாக பல சவால்கள் மத்தியிலும் நீதியாக வாழ்ந்து வருகின்றேன் ஆனால் இவனோ அநீதியான வாழ்க்கை வாழ்கின்ற போதிலும், அவன் என்றும் சுகஜீவியாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகின்றான். இத்தனை பாடுகளும் சோதனைகளும் எனக்கு எதற்கு? என்று தன் மனதிலுள் ளதை தன் நண்பர்களிலொருவனுகுக் கூறினான். அவனோ மறுமொழி யாக: எத்தனை தடவை நான் உனக்கு கூறியிருக்கின்றேன். ஏன் அதி பரிசுத்தமாக வாழ நீ முயற்சி செய் கின்றாய். வாழ்க்கையை இலகுவாக எடுத்துக் கொள். பிழைப்புக்காக ஒரு சில பொய்களை கூறுவதில் தவ றேதுமில்லை என்று வேதத்திற்கு முரணான ஆலோசனையைக் கூறி னான். இந்த எண்ணத்தை தன் மனதிலே, நண்பனானவன் விதைப்ப தற்கு, உத்தமமான வாழ்க்கை வாழ்ந்து வந்த மனிதனாவன் இடம் கொடுத்தான். இப்போது அவன் மனதிலே இரண்டு தெரிவுகள் உண்டா யிற்று. 1. பொல்லாதவர்கள் மேல் எரிச்சல் கொள்ளாமல், தேவனை அண்டிக்கொண்டிருப்பதா? 2. உத்தம வழியை விட்டு கொஞ்சம் விலகி, பிழைப்புக்காக, சில பொய்களை கூறிக்கொள்வதா? இப்படியாக மன திலே தோன்றும் எண்ணங்களை தியானிக்கும் போது, அவை சந்தர்ப்ப சூழ்நிலையிலே ஒரு கிரியை உண்டாக்கும். தேவனுக்கேற்ற சிந்தையி னால் பிறக்கும் கிரியை அவனை நித்திய ஜீவனை நோக்கியும், உலக போக்கிற்கு ஒத்த சிந் தையினால் பிறக்கும் கிரியையானது நித்திய மரணத்தை நோக்கியும் அவனை நடத்திச் செல்லும். பிரியமானவர்களே, மனிதன் செய்யும் ஒவ்வொரு கிரியையும் அவன் மனதிலே தோன்றிய எண்ணங்களால் உண்டாகின்றது. எனவே, எல்லா சூழ்நிலைகளிலும் நீங் கள் தேவனை அண்டிக் கொண்டிருங்கள். எதைக் குறித்தும் கலங்கா மல், கவலையடையாமல், உங்கள் மனதிலுள்ள யாவற்றையும் தேவனு க்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

ஜெபம்:

என் நிலைமையை நன்றாக அறிந்த தேவனே, உமக்கு பிரியமி ல்லாத எண்ணங்களை என் சிந்தையிலே வருவதற்கு இடங்கொடாமல், உமக்கேற்றவைகளை சிந்தித்துக் கொண்டிருக்க என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:8