புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 11, 2021)

நாம் தனித்து விடப்படுவதில்லை

யோவான் 14:16

அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்


இந்த உலகத்திலே வாழும்வரைக்கும் நம்முடைய தெரிவுகளும் தீர்மானங்களும் தவிர்க்கமுடியாதவைகளே. ஆனால் நாம் நமது வாழ்வின் பாதையை கடினமாக்காதபடிக்கு நம்முடைய தெரிவுகள் ஒவ்வொன் றையும் குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒரு இடுக்கமான சந்தர்ப்பத்திலிருந்து நாம் தப்பித்துக் கொள்வதற்காக, நம் பார்வைக்கு சுபலமாக தோன்றும் தீர்மானங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. முக்கியமான பரீட்சையொ ன்றை எழுதிக் கொண்டிருக்கும் மாணவனானவன், பரீட்சைத்தாளிலே, ஒவ்வொரு கேள்விகளுக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப் பட்டிருப்பதையும், அதிலே சரியான பதிலை தெரிந்து கொள்ளும்படி கேட்கப்பட்டிருப்பதையும் கண்டான். ஒவ்வொரு கேள்வியை வாசி க்கும் போதும், அந்தக் கேள்விக் குரிய பதிலை தெரிந்து கொள்ளும்படி, கொடுக்கப்பட்ட நான்கு தெரிவுகளையும் அவன் தன் சிந்தையிலே வைத்து ஆராய்ந்து பார்த்தான். ஆம், இந்த உலக வாழ்க்கையிலே, ஒவ்வொரு அடிகளை நாம் எடுத்து வைக்கும் போதும், நமக்கு முன்பாக தெரிவுகள் காணப்படுகிறது. அவைகளில்; எதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் தீர்மானம் நம் சிந்தையிலே ஆராய்ந்து அறியப்படுகின்றது. நம் வாழ்விலே தெரிவுகள் அதிகரிக்கும் போது, சரியான தீர்மானம் எடுப்பதும் கூட கடினமாக மாறிவிடுகிறது. பரீட்சைக்கு சென்ற அந்த மாணவனுக்கு பரீட்சையாளர்கள் அந்தத் தெரிவுகளை கொடுத்தார்கள். அதில் சரியான பதிலை தெரிந்து கொள்வதற்கு அவன் அந்த விடயத்தை குறித்து நன்கு கற்றிருக்க வேண்டும். நம்முடைய வாழ்விலே உண்டாகும் சோதனைகளிலே, நம் சிந்தையிலே பல தெரிவு கள் உண்டாகும். அந்த மாணவனானவனோ, பரீட்சையின் போது தனித்து விடப்பட்டான். ஆனால் நாமோ நம்முடைய சோதனையின் நாட்களிலே தனித்து விடப்படுவதில்லை. நம்மோடு என்றென்றைக்கும் இருந்து, நம்மை வழிநடத்தும் தேவ ஆவியானவர் நம்மோடு இருக்கின்றார். நாம் அவருடைய சத்தத்திற்கு செவி கொடுப்போமென்றால், நம்முடைய சிந்தையிலே தோன்றும் தெரிவுகளில், எவை தேவனால் உண்டானவைகள்? எவை உலகத்தினால் உண்டானவைகள்? என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஜெபம்:

நீதியின் பாதையில் என்னை நடத்தும் தேவனே, என் சோதனையின் நாளிலே நான் என் சுயதீர்மானத்தினால் குழப்பங்களை ஏற்படுத்தாதபடிக்கு, உம்மை சார்ந்து சோதனையை ஜெயிக்க பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 16:33