புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 10, 2021)

பெரும்பாதையான வழி

ஏசாயா 35:8

அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்


ஒரு ஊரிலிருந்து இன்னுமொரு ஊருக்கு நேரிய பாதை வழியாக ஒரு மனிதனானவன் தன் குடுத்பத்தோடு சென்று கொண்டிருந்தான். போகும் வழியிலே, அவனுடைய பழைய நண்பர்களிலொருவன், நீ குழந்தைக ளோடு பயணம் செய்கின்றாயே, ஏன் இந்த நீண்ட வழியிலே செல்கி ன்றாய், இது பல நாட்கள் எடுக்கும். என் பின்னே வா உனக்கு வான் குறுகிய வழியை காண்பிப்பேன் என்று கூறினான். இப்போது அந்த மனிதனுடைய மனதிலே இரண்டு தெரிவுகள். அவற்றுள் ஒன்றை சீக் கிரமாய் அவன் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த இரண்டு தெரிவுக ளையும் தனக்குண்டான தரவுக ளையும் தன் சிந்தையில் வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தான். தன் பழைய நண்பனின் அறிவுரையின்படி, குறுக்கு வழியை தெரிந்து கொண்டான். சற்று தூரம் சென்றபின்பு, அவன் நண்பன் அவனை நோக்கி, இந்தப் பாதை காட்டுக்கு அருகாக இருப்பதால் வனவிலங்கு களை குறித்து எச்சரிக்கையாயிரு என்று கூறினான். இப்படியே அவர் கள் சென்று கொண்டிருந்த போது, பாதை இரண்டாகப் பிரிவதை அந்த மனிதனானவன் கண்டு கொண்டான். இப்போது எந்த வழியாக போவது என்பதைக் குறித்த தீர்மானத்தை அவர்கள் எடுக்க வேண்டும். இப்படி யாக, அவர்கள் பிரயாணப்பட்டுப் போகும்போது ஒவ்வொரு பாதையும், பல வழிகளாக பிரிந்து கொண்டே இருந்தது. செல்லும் வழியிலே இளை ப்பாறுவதற்கு எந்த விடுதியோ, வீடுகளோ இல்லை. பசியை ஆற்றிக் கொள்வதற்கு உணவுச் சாலைகள் எதுவும் இருக்கவில்லை. சீக்கிரமாய் செல்ல வேண்டும் என்று தன் மனதின் எண்ணப்படி குறுக்கு வழியை தெரிந்து கொண்ட அந்த மனிதனானவன், இப்போது தன் தீர்மானத்தி னால் அவன் வாழ்விலும், அவன் குடும்பத்தினரின் வாழ்விலும் உண் டாகியிருக்கும் குழப்பங்களையும், அதன் மத்தியிலே உண்டாகிய பல தெரிவுகளையும் குறித்து மனவருத்தமடைந்தான். பிரியமானவர்களே, நாம் எடுக்கும் தவறான தீர்மானம் ஒவ்வொன்றும், நம் வாழ்க்கையிலே இன்னும் பல தெரிவுகளை கொண்டு வரும். தேவனுடைய மேன்மை யான வழியையே எந்த நிபந்தனையுமின்றி நீங்கள் தெரிந்து கொள்ளு ங்கள். பார்வைக்கு அது நீண்டதாகத் தெரிந்தாலும், கர்த்தர் நம்மோடு இருப்பார். அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந் துவருவதில்லை. அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.

ஜெபம்:

அவர் என் கால்களை உம்முடைய வழியிலே ஸ்திரப்படுத்தும் தேவனே, நீரே எனக்குப் பலத்த அரணானவர்; நீரே என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் என்பதை அறிந்து உம் வழியிலே நடக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 சாமு 22:31