புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 09, 2021)

என் படியை எனக்கு அளந்து தாரும்

நீதிமொழிகள் 30:9

என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.


நவீனமயமடைந்து கொண்டு வரும் இந்த உலகிலே மனிதர்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்காக உழைப்பதற்கு கூட கல்வி அறிவு அவசி யமாக இருக்கின்றது. தமிழ் மொழியிலே வேதத்தை வாசிப்பவர்கள், தமிழ் பாiஷயை யாரோ ஒருவரிடத்தில் கற்றிருக்கின்றார்கள். நாம் பிறந்த நாளிலிருந்து வீட்டிலும், வெளியிலும், பாடசாலைகளிலும், செய்தி ஊடகங்கள் வழியானவும்: கணிதம், மொழிகள், சமூகம், சுகாதாரம் போன்ற பற்பல விடயங் களை பற்றிக் கற்றுக்கொள்கின்றோம். அதாவது நாம் அறிந்தோ அறியா மலோ, நம் வாழ்நாட்களிலே கல்வி யறிவிலே வளர்ந்து கொண்டு செல் கின்றோம். நாம் அதிகமாக கல்வி கற்றுக் கொண்டால் அதிகமாக உழை க்கலாம், செழிப்பாக வாழலாம் என்ற எண்ணம் பரவலாக மனிதர்களிடத் திலே உண்டு. இந்த உலகிலுள்ள எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு? அப்படியானால் நாம் எவ்வளவு உழைக்க வேண்டும் என்பத ற்கு எல்லை உண்டா? வருடாவருடம் என்னுடைய வருமானம் அதிகரித் துக் கொண்டே போக வேண்டும் என்பதே பொதுவாக மனிதர்களுடைய விருப்பமாக இருக்கின்றது. இன்று சில இடங்களிலே எவ்வளவு உழைக் கின்றோம் அல்லது எவ்வளவு ஆஸ்திகளையுடையவர்களாக இருக்கின் றோம் என்பதையே, தேவனுடைய பிள்ளைகள் கூட தேவனுடைய ஆசீர் வாதத்தின் அளவு கோலாக வைத்திருக்கின்றார்கள். இப்படிப்பட்ட உப தேசங்களை செய்கின்றவர்கள், இந்த உலகிலே எளிமையான வாழ் க்கை வாழ்ந்த பரிசுத்தவான்களை மறந்து போய்விடுகின்றார்கள். 'நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லா தபடிக்கும், தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாம த்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என் னைப் போஷpத்தருளும்' என்று பரிசுத்த வேதாகமம் அறிவுரை கூறுகி ன்றது. அதாவது, ஆண்டவரே நான் உம்மை மறந்து போய்விடாதபடி க்கும், விசுவாச வாழ்க்கையை விட்டு விலகாதபடிக்கும், எனக்கு தேவை யான அளவு சம்பளத்தையே எனக்குத் தாரும். ஒரு வேளை உலகத் திலே, மற்றய மனிதர்களைப் போல நாம் சுக போகமாக வாழாவிட் டாலும், அனுதினமும் ஆண்டவர் இயேசுவின் சத்தத்தைக் கேட்டு, அதன்படி அவரோடு நடந்து செல்லும் வாழ்க்கையே நமக்கு இன்றிய மையாதது. இந்த உலகிலே வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கு ஆண்டவர் இயேசு நம்மோடு இருப்பதே நம்முடைய தேவை என்பதை நாம் திட்டமாக அறிந்து கொள்ள வேண்டும்.

ஜெபம்:

பரலோகம் வந்தடையும்படிக்காய் என்னை அழைத்த தேவனே, இந்த உலக வாழ்க்கையின்படி, நான் எந்த நிலைமையிலிருந்தாலும் உமக்குள்ளே மனரம்மியமாயிருக்க எனக்கு கற்று தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:11