புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 08, 2021)

வாழ்விலே உண்டாகும் தெரிவுகள்

நீதிமொழிகள் 14:12

மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.


ஒரு ஊரிலே வசித்து வந்த காவல்த்துறை அதிகாரியின் மகனானவன், அயலிலே வசித்து வந்த இன்னுமொரு வாலிபனுடன் சண்டை போட்டு, அவனை அடித்ததால், குற்றத்திலே அகப்பட்டுக்கொண்டான். இந்த சம்ப வத்திலே அயலிலே வசித்து வந்த அந்த வாலிபன் நிரபராதி என்பதற்கு அந்த ஊரிலே வசித்து வந்த பல மனிதர்கள் சாட்சியாக இருந்தார்கள். காவல்துறை அதிகாரியானவரின் மனதிலே இவ்வாறானதொரு நிலை யிலே பல எண்ணங்களும், தெரிவுக ளும் தோன்றின. தன் அதிகாரத்தின் செல்வாக்கை பயன்படுத்தி தன் மக னானவனை குற்ற மற்றவன் என்று காண்பிப்பதா? தன் மகனானவனு டைய குற்றத்தை ஏற்றுக் கொண்டு அந்த வாலிபனுடைய பெற்றோரிடம் மன்னிப்பை கேட்டு அவர்களின் தய வை நாடுவதா அல்லது அந்த வாலிபன்மேல் குற்றத்தை சுமத்தும்படி காரியங்களை நடப்பிப்பதா? ஆனாலும் அவர் தேவனுக்கு பயப்படு கின்ற ஒரு மனுஷனாக இருந்ததினால், தன் மகனானவனுடைய குற்றத்தை ஏற்றுக் கொண்டு, அந்த வாலிபனுடைய பெற்றோரிடம் மன்னிப்பை கேட்டுக் கொண்டார். பாருங்கள் அந்த காவல்துறை அதிகாரியின் வாழ் க்கை யிலே அவருக்குண்டான அதிகாரத்தினால் அங்கே அவருடைய மனதிலே பல தெரிவுகள் உண்டாயிருந்தது. அது போலவே, நம்முடைய வாழ்க்கையிலும் இந்த உலகத்தில் மேன்மையாக கருதப்படும் காரிய ங்கள் பல தெரிவுகளை நமக்கு உண்டாக்குகின்றது. எடுத்துக்காட்டாக, நீங்கள் உலக கல்வியறிவிலே தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றவர்களாக இருந்தால், பல உலக ஸ்தாபனங்கள் தங்களுடன் இணைந்து கொள்ளு மாறு உங்களுக்கு அழைப்பை விடுவிக்கும். சில வேளைகளிலே நாடு விட்டு நாடு செல்வதற்கும் வழிகள் பிறக்கும். கருப்பொருளாவது, இது சரி, அது பிழை என்பதல்ல, மாறாக, இந்த உலக கல்வியறிவு மனிதர்க ளுடைய வாழ்க்கையிலே பல தெரிவுகளை உண்டாக்கும். அந்தத் தெரிவுக ளில் எது தேவனுடைய சித்தம் என்பதை அவனவன் தன் வாழ்க்கை யிலே நிதானித்தறிந்து, தேவ சித்தத்தை நிறைவேற்ற வேண்டும். இப்ப டியாக இந்த உலக வாழ்க்கையிலே, உலக ஆஸ்தி, கல்வி, செல்வா க்கு யாவும் நம்முடைய வாழ்விலே பல தெரிவுகளை உண்டாக்கலாம், அவற்றில் சில மனித அறிவுக்கு செம்மையானதாகத் தோன்றலாம் ஆனால் அந்த வழிகளோ மனிதனுக்கு நித்திய ஜீவனை கொடுப்பதில்லை. தேவனுடைய வார்த்தையை பற்றிக் கொண்டு தேவ சித்தத்தை நிறைவேற்றுகின்றவர்களே நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வார்கள்.

ஜெபம்:

தேவனாகிய கர்த்தாவே, இந்த உலகத்திலே பல தெரிவுகள் உண்டு. நானோ சத்தியத்திலே நடக்கும்படி, உமது வழியை எனக்குப் போதித்து, பிரகாசமுள்ள மனக் கண்களை எனக்குள் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 24:35