புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 06, 2021)

விசுவாசத்தில் நிலைத்திருப்தே ஆசீர்வாதம்

1 தீமோத்தேயு 6:12

விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு,


இந்த உலக வாழ்விலே தேவைகள் இல்லாத மனிதர்கள் யார்? எல்லா மனிதர்களுக்கும் தேவைகள் உண்டு. அந்த தேவைகள் யாவற்றை றிற்கும் பணமே பதில் என்னும் அபிப்பிராயம் மனிதர்கள் மனதிலே அதிகமாக வளர்ந்து கொண்டு போகின்றது. அதை அடைந்து கொள் வதற்கு மனிதர்கள் அயாரது உழைக்கின்றார்கள். தங்கள் பிள்ளைகளை ஊக்கமாக கல்வி கற்கும்படி ஊக்கு விக்கின்றார்கள். நல்ல உத்தியோ கங்களை தேடிச் செல்கின்றார்கள். இவைகளை அடைந்து கொள்வ தற்கு தடையாக இருக்கும் காரணிக ளை தங்கள் வாழ்விலிருந்து அகற் றிவிடுகின்றார்கள். சில மனிதர்களுடைய வாழ்விலே, ஐசுவரியத்தை அடைந்து கொள்வதற்கு, சபை ஒன்றுகூடல், ஞாயிறு ஆராதனை, வேத வாசிப்பு, ஜெபக்கூட்டங்கள் போன்றவைகள் தடையாக மாறிவிடுகி ன்றது. இவர்கள் மனதிலே உண்டாயிருக்கும் போராட்டம் என்ன? பணத் தேவை. எனவே அதை அடையும் வழியை நாடித் தேடு என்று ஒரு பகுதி கூறுகின்றது. அந்தப் பகுதியானது, விசுவாசத்தை நிலைத்திருக் கும்படி தேவன் நியமித்திருக்கும் வழிகளாகிய: வேத வாசிப்பின் நேரம், ஜெப வேளை, சபை ஆராதனைகள் நாட்கள் போன்றவற்றை எதிர்த்து போராடுகின்றது. அதாவது, பணத்தை அடையும்படி அதற்கு தேவை யான கல்வி, வியாபரம், அதைக் குறித்த அறிவுள்ள மனிதர்களின் ஐக்கியத்தோடு நேரம் செலவிடுவது என் வாழ்வின் முதலிடமா? அல்லது அனுதினமும் கருத்தோடு வேதத்தை வாசித்து ஜெபித்து, சபை ஆராதனைகளில் முழுமனதோடு கலந்து கொண்டு, தேவ வழிநடத்து தலின்படி என் வாழ்வை அமைத்துக் கொள்வது முதலிடமா என்ற கேள்வி உண்டாகின்றது. பணத்தின் பெருக்கம் தேவனுடைய ஆசீர் வாதம் என்னும் கொள்கையோடு வாழும் மனிதர்களின் வாழ்க்கையில், பணம் பெருகும் போது, அவர்கள் வாழ்க்கையில் பல வசதிகளும் சுக போகங்களும் உண்டாவதால், தேவன் தங்களோடு இருக்கின்றார் என்று எண்ணிக் கொள்கின்றார்கள். ஆனால் அவர்கள் நம்பிக்கை படிப்படியாக உலக பொருட்களின்மேல் சார்ந்து கொள்வதால் விசுவாச வாழ்க்கையை விட்டு வழுவிப்போய்விடுகின்றார்கள். நீங்களோ, இந்த உலக பொக்கிஷங்களின் பெருக்கம் யாவும் தேவனுடைய நன்மை என்று ஊகித்துக் கொள்ளாமல், உயர்விலும், தாழ்விலும், நித்திய ஜீவனுக்குரியவைகளையே முதலாவதாக தேடுங்கள். ஒருபோதும் தேவன்மேல் கொண்டுள்ள விசுவாசததை விட்டுவிடாதிருங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, உலக ஐசுவரியத்தை விரும்பி, சோதனை யிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுந்துவிடாமல் என்னை காத்துக் கொள்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன்

மாலைத் தியானம் - 2 தீமோ 4:3-5