புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 05, 2021)

முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்கள்

ரோமர் 8:37

இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்பு கூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.


'எதிராளியானவனை வெற்றிகொள்ள முடிவில்லை என்றால் அவர்க ளோடு இணைந்து கொள்ளுங்கள்' என்ற கூற்றறை பல மனிதர்கள் பல மனிதர்கள் பின்பற்றுகின்றார்கள். நம்முடைய ஆவிக்குரிய வாழ் க்கையிலே நம்மை எதிர்த்து போராடும் மாம்ச இச்சைகள், கண்கள் இச்சைகள், ஜீவனத்தின் பெருமை போன்ற இந்த உலகத்தினால் உண்டா னவைகள் யாவற்றையும் நாம் ஜெயம் கொள்ள வேண்டும். மதுபான வெறி கொள்ளுதலுக்கு அடிமையானவனொ ருவன், 'எனக்கு என் மதுபான வெறி கொள்ளுதலை மேற்கொள்ள முடிய வில்லை. எனவே அது பாவமில்லை, அவர் கொஞ்சம் குடிக்கின்றார், இவர் முன்பு குடித்தார்' என்று பல காரண ங்களை சுட்டிக் காட்டி, அந்த அடிமைத்தன பழக்கவழக்கத்திற்கு மன தார தன்னை ஒப்புக் கொடுக்கும் போது, தன்னுடைய சொந்த கொள் கையின்படியும் இந்த உலகத்தின் போக்கின்படியும் போராட்டமில்லாத வாழ்க்கை வாழ்கின்றேன் என்று எண்ணிக் கொள்கின்றான். இவ்வண் ணமாகவே, சிலர் தேவ வசனத்திற்கு முரணான திருமண முறைமை களை கைக்கொள்கின்றார்கள். வேறு சிலர் வேத வார்த்தைகளுக்கு முரணாக வியாபாரம் செய்து வருகின்றார்கள். இன்னும் சிலர், உலக பொக்கிஷங்களின் மேல் தங்கள் கண்களை பதிய வைக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள், தேவனுடைய வார்த்தையை கலப்பில்லாமல் தெளிவாக போதிப்பவர்கள் அன்பில்லாதவர்கள் என்று அவர்களை தள்ளிவிட்டு, தங்கள் வழிகளுக்கு ஆதரவாக பேசும் மனிதர்களiயும், ஐக்கியங்களையும் தேடிச் செல்கின்றார்கள். இதனால் தாங்கள் போரா ட்டமில்லாத வாழ்க்கை வாழ்க்கின்றோம் என்று எண்ணிக் கொள்கின் றார்கள். ஆனால் அவர்கள் இப்பிரபஞ்சத்தின் அதிபதியாக பிசாசான வனுக்கு தங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்திருக்கின்றோம் என்று உணராதிருக்கின்றார்கள். நாம் அப்படியிருக்கலாகாது. இந்த உலகிலே நம்மை எதிர்க்கும் சக்திகள் எதுவாக இருந்தாலும், அவற்றிற்கு நாம் நம்மை ஒப்புக் கொடுக்காதல், நம்மை நோக்கி வரும் எல்லாவிதமான போராட்டங்களைக்; கண்டு சோர்ந்து போகாமல், திடமனதாயிருந்து, இந்த உலகத்தை ஜெயித்த ஆண்வராகிய இயேசு நம்மோடு இருக்கி ன்றார் என்பதை அறிக்கையிட்டு, நம்மில் அன்புகூருகிற அவர் வழி யாக முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்க வேண்டும்.

ஜெபம்:

சுயாதீனத்திற்கு என்று என்னை அழைத்த தேவனே, நீர் தந்த சுயாதீனத்தை நான் மாம்சத்திற்கேதுவாக பயன்படுத்தாமல், கிறிஸதுவுக்குள் வெற்றி சிறக்கும் வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:12-14